விஜய் அதிக விமர்சனத்துக்கு உள்ளாக காரணம்..  முதல் முறையா எனக்காக செஞ்சார்..! சீக்ரெட்டை உடைத்த  வெங்கட்பிரபு..

விஜய் நடித்த திரைப்படங்களிலேயே தற்சமயம் அதிக வரவேற்பை பெற்ற படமாக கோட் திரைப்படம் இருக்கிறது. பொதுவாக விஜய் ரசிகர்கள்தான் விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்காக காத்திருப்பார்கள். ஆனால் கோட் திரைப்படத்தை பொருத்தவரை விஜய் ரசிகர் அல்லாதவர்கள் கூட அந்த படத்திற்காக காத்திருக்கின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் விஜய் கடைசியாக நடிக்கும் இரண்டு திரைப்படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று. மேலும் விஜய் முதன்முதலாக நடிக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் கோட்தான். இதற்கு முன்பு சயின்ஸ் பிக்சன் திரைப்படம் என்று எந்த ஒரு திரைப்படத்திலும் விஜய் நடித்தது கிடையாது.

விமர்சனத்துக்கு உள்ளாக காரணம்

இது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருக்கிறது அந்த ட்ரைலர் கிட்டத்தட்ட ஹாலிவுட் படத்தின் தரத்தில் இருப்பதாக கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர். மேலும் அந்த திரைப்படத்தில் மொத்தம் மூன்று விஜய் இருப்பதாக கூறப்படுகிறது.

இளமைக்கால விஜய்யாக 2 பேரும் வயதான விஜய்யாக ஒரு விஜய்யும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வயதான விஜய்தான் படத்தின் கதாநாயகன் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் அனுபவங்களை வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது இளம் விஜய்யை முழுக்க முழுக்க கிராபிக்ஸ் முறையில்தான் உருவாக்க நினைத்தோம். ஆனால் அதற்கு ஆகும் தொகை மிகவும் அதிகமாக இருந்தது.

எனக்காக செஞ்சார்

பிறகு என்னுடைய மேனேஜர் டீ ஏஜிங் முறை என்று ஒன்று இருக்கிறது விஜய்யை நடிக்க வைத்துவிட்டு அவரது முகத்தை மட்டும் மாற்றி விடலாம் என்று கூறினார். அதற்கு பிறகு தான் அது குறித்த ஆலோசனைகளை செய்தோம்.

முதலில் சோதனை ஓட்டத்திற்காக மெர்செல் திரைப்படத்தின் காட்சிகளை எடுத்துக்கொண்டு போய் அதில் விஜய்யின் முகத்தில் வயதை குறைக்க முடியுமா என்று பார்த்தோம். அது நன்றாகவே வேலை செய்தது அதற்குப் பிறகு விஜய்யிடம் இது குறித்து பேசினோம். விஜய்யும் அது குறித்து மிகவும் ஆர்வமாக இருந்தார்.

சீக்ரெட்டை உடைத்த  வெங்கட்பிரபு

ஏனெனில் இதெல்லாம் நாங்கள் இப்பொழுது தான் முதல் முறையாக செய்கிறோம் இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது. இதனால் விஜய்யும் கூட எப்படி இந்த படம் வரப்போகிறது இந்த இளமை விஜய் எப்படி இருக்க போகிறார் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

இதற்காக விஜய்யின் முகத்தை முழுதாக ஸ்கேன் செய்ய வேண்டும் என்று அந்த நிறுவனத்தினர் கூறிவிட்டனர். மேலும் ஸ்கேன் செய்யும் பொழுது முகத்தில் விஜய்க்கும் முடி இருக்கக் கூடாது எனவே மீசை தாடி அனைத்தையும் முழுதாக சேவ் செய்து விட வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

அதனால்தான் விஜய் ஷேவ் செய்துவிட்டு அந்த ஸ்கேன் செய்வதற்கு வந்தார். அதற்கு பிறகு இளமை கால விஜய் தோற்றத்திற்கும் ஷேவ் செய்தே நடிக்க வேண்டி இருந்தது. மேலும் அந்த தோற்றத்துடன் நிறைய நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதனால் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் அதற்குப் பிறகு விஜய் என்னிடம் வந்து வாழ்க்கையிலேயே முதன்முறையாக கிளீன் ஷேவ் செய்தது உங்களுக்காகதான் என்று என்னிடம் கூறினார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் வெங்கட் பிரபு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version