நைட் 1 மணிக்கு மேல அதை பண்ணுனா.. எல்லோரும் தப்பா பேசுனாங்க.. சிவாங்கி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த வெங்கடேஷ் பட்..!

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிகழ்ச்சியை துவங்கிய பொழுது இதற்கு பெரிதாக வரவேற்பு என்பதே இருக்கவில்லை. முதல் சீசனைப் பொறுத்தவரை அதற்கு பார்வையாளர்களே அதிகமாக இல்லை. ஆனால் இரண்டாவது சீசனில் இருந்து குக் வித் கோமாளி அதிக பிரபலமானது.

நைட் 1 மணிக்கு மேல

இதன் வெற்றிக்கு முக்கிய காரணம் அதில் கோமாளிகளாக வந்த பாலா, புகழ், மணிமேகலை, சிவாங்கி மாதிரியான நபர்களே ஆகும். அதனால்தான் ஐந்து வருடங்களாகியும் கூட இன்னமும் இவர்கள் எல்லாம் குக் வித் கோமாளியில் இருந்து கொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் எல்லாம் ஒரு குடும்பம் என்றே கூற வேண்டும். அதிலும் அதற்கு முன்பு வரை விஜய் டிவியில் டெரரான ஒரு ஜட்ஜ் ஆக இருந்து வந்த வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளிக்கு பிறகு தான் ஒரு ஜாலியான நடுவராக இருந்து வந்தார்.

எல்லோரும் தப்பா பேசுனாங்க

இந்த நிலையில் குக் வித் கோமாளியில் தொடர்ந்து பயணித்து வந்ததன் காரணமாக வெங்கடேஷ் பட்டுக்கும் குக் வித் கோமாளியில் உள்ள கோமாளிகளுக்கும் இடையே நல்ல நட்பு உண்டானது. இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது சிவாங்கி ஐந்தாவது சீசனில் குக்காக வரும் பொழுது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் சிவாங்கி கடந்த நான்கு சீசன்களாக கோமாளியாகதான் இருந்து வந்தாள். மேலும் அவள் எங்கள் குக் வித் கோமாளி குடும்பத்தின் செல்லப்பிள்ளை என்றுதான் கூற வேண்டும்.

சிவாங்கி குறித்து ஓப்பன் டாக்

அவளுக்கு சீரகம் எது தனியா எது என்று கூட தெரியாது. அப்படி இருக்கும்பொழுது எப்படி சமைக்க வரப் போகிறாள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் ஆறு மாத காலங்கள் இதற்காக ட்ரைனிங் எடுத்துக் கொண்டாள்.

இரவு 1 மணிக்கு மேல் துவங்கி காலை 5 மணி வரை எல்லாம் அவள் ட்ரைனிங் எடுத்து இருக்கிறாள். அப்படி எல்லாம் பயிற்சி எடுத்து குக் வித் கோமாளிக்கு வந்த அவளை பலரும் விமர்சனம் செய்தனர். சிவாங்கி தானே இவளை எளிதாக ஜெயிக்க வைத்து விடுவார்கள் என்று அவர்கள் கூறினார்கள்.

இதனால் அவளது உழைப்பின் கடினம் இவர்களுக்கு புரியவில்லை இவர்களெல்லாம் அறிவே இல்லாமல் சிவாங்கியை திட்டி வந்தனர் என்று இந்த விஷயம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் வெங்கடேஷ் பட்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version