தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் வெற்றிமாறன் முக்கியமானவர். ஆரம்பத்தில் அவர் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் துவங்கி வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் கதைகளத்தை பேசுவதாக இருக்கும்.
மேலும் ஒரு முக்கியமான அரசியல் அந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். தமிழ் சினிமாவில் முதன்முதலாக பொல்லாதவன் திரைப்படத்தில்தான் இருசக்கர வாகனங்கள் திருட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து பல விவரங்களை பேசி இருந்தார் வெற்றிமாறன்.
வட சென்னை 2
அதேபோல அவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படத்தில்தான் முதன் முதலில் சேவல் சண்டைகள் குறித்து மிக விரிவாக பேசியிருந்தாலர் வெற்றிமாறன் அதற்கு முன்பு சேவல் சண்டை தொடர்பாக தமிழில் திரைப்படங்களே வந்தது கிடையாது.
அந்த அளவிற்கு வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதோ ஒரு விஷயத்தை மிக முக்கியமாக பேசி இருப்பார் வெற்றிமாறன். அது மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து விடும். வெக்கை என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு அவர் இயக்கிய மற்றொரு திரைப்படம் அசுரன் அந்த திரைப்படத்திலும் சாதிய பிரச்சனைகளை மிக விரிவாக பேசி இருப்பார்.
அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்
அதேபோல விசாரணை திரைப்படத்திலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அதை திரைப்படம் ஆகியிருந்தார் வெற்றிமாறன். இப்படி வெற்றிமாறன் ஒவ்வொரு திரைப்படம் இயக்கும்போதும் ஒரு முக்கியமான விஷயத்தை பேசுவதால் அவரது திரைப்படத்திற்கு வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகின்றன.
அப்படி அவர் இயக்கிய ஒரு திரைப்படம்தான் வடசென்னை. இந்த திரைப்படத்தை இயக்கும்போதே இரண்டு படங்களாக எடுக்க வேண்டும் என்பது வெற்றிமாறனின் விருப்பமாக இருந்தது. இதனால் பாதியிலேயே வடசென்னை படத்தின் பாகம் ஒன்று முடிந்துவிடும்.
அடுத்த ப்ரோஜக்ட் இதுதானா
அந்த படத்தில் முதன்முதலாக தனுஷ் அந்த பகுதியில் இருக்கும் முக்கிய ரவுடியை எதிர்ப்பதோடு கதை முடிந்துவிடும். அதற்கு பிறகு தனுஷ் என்ன செய்ய போகிறார் என்பது தெரியாமலேயே இருந்து விடும்.
படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் மற்ற கதைகள் எல்லாம் வரும் என்று கூறப்பட்டது. ஆனால் பல வருடங்கள் ஆன பிறகும் கூட படத்தின் இரண்டாம் பாகம் இப்பொழுது வரை வரவில்லை. இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெற்றிமாறன் கூறும்போது கண்டிப்பாக வட சென்னை2 படம் வரும் என்று கூறியிருக்கிறார்.
தான் எப்போதுமே சுற்றி இருக்கும் இடத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கதைகளத்தை உருவாக்குவேன். அந்த வகையில் வட சென்னை 2 வும் அப்படித்தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் அடுத்து வட சென்னை 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.