இது வேற மாறி..! – வெற்றிமாறன், தனுஷ், ஜூனியர் NTR கூட்டணி..! – என்ன கதைக்களம் தெரியுமா..?

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் ( Vetrimaaran ) கோலார் தங்க சுரங்கத்தை மையமாகக் கொண்ட திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ( Studio Green ) தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ( Dhanush ) ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வடசென்னை என்ற திரைப்படத்தில் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எக்கத்தக்க எகிரி கிடைக்கும் நிலையில் தற்போது கேஜிஎப் பின்னணியில் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன் என்று கூறப்படுகிறது.

Vetrimaaran Dhanush Jr.NTR Combo

அதே சமயம் வடசென்னை ( Vada Chennai ) படத்தின் இரண்டாம் பாகத்தை கே ஜி எஃப் பின்னணியில் உருவாக்க இருக்கிறார்களா..? என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. ஏற்கனவே, இயக்குனர் பா ரஞ்சித் நடிகர் விக்ரம் கூட்டணியில் தங்களான் என்ற தமிழ் திரைப்படம் ( Tamil cinema ) KGF பின்னணியில் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பிஹைன்ட்வூட்ஸ் நேர்காணின்போது கூறியிருந்தார். இருப்பினும் இந்த திட்டத்தின் காலக்கெடு அல்லது திரைப்படத்தை அவர் தயாரிப்பார் என்பது குறித்த எந்த ஒரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

Vetrimaaran Dhanush Jr.NTR Combo

இந்நிலையில், கேஜிஎப் பின்னணியில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் கூட்டணி புதிய திரைப்படத்தை தயாரிக்க உருவாக்க உள்ளது என்ற தகவல் பெறும் பரபரப்பு ஏற்படுத்திருக்கின்றது.

வடசென்னை இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் இவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முழுதாக புதிய படத்தில் இருவரும் இணைந்து இருக்கின்றனர்.

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட நான்கு படங்கள் வெளியாகி உள்ளது. இந்த நான்கு படங்களுமே பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்றன.

Vetrimaaran Dhanush Jr.NTR Combo

இந்நிலையில், வடசென்னை இரண்டாம் பாகமாக இந்த கேஜிஎப் பின்னணியில் உருவாகும் படம் தயாராகுமா அல்லது முற்றிலும் மாறுபட்ட கதைக்கலாமா என்பதை வெற்றி மாறன் தான் விளக்க வேண்டும்.

இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருக்கிறார் வெற்றிமாறன் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. மட்டுமில்லாமல் நடிகர் சூர்யாவுடன் வாடிவாசல் என்ற திரைப்படத்தையும் கமிட் செய்து வைத்திருக்கிறார்.

Vetrimaaran Dhanush Jr.NTR Combo

இந்த படத்தின் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷை வைத்து கே.ஜி.எஃப் பின்னணியில் புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்க இருக்கும் வெற்றிமாறன் இந்த தகவல் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …