முன்னணி இயக்குனர் மீது கடும் கோபத்தில் நடிகர் சூரியா..! வாடிவாசல் படத்தின் புது ஹீரோ யார் தெரியுமா..?

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் தமிழக ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு இவருக்கு மிக நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.

இதனை அடுத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க இருந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிப்பாரா? மாட்டாரா? என்பது போன்ற பேச்சுக்கள் மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது.

முன்னணி இயக்குனர் மீது கோபத்தில் சூர்யா..

வணங்கான் படத்தை அறிவித்த நிலையில் அந்த படத்தை தயாரிக்க முன் வந்த சூர்யா திடீரென பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து மொத்தமாக இந்த படத்தை விட்டு விலகி விட்டார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜயை வைத்து படம் உருவாகி வரும் வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வணங்கான் திரைப்படம் வெளி வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

அது போலத் தான் வாடிவாசல் திரைப்படமும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டு பல ஆண்டுகளாக படப்பிடிப்பு முழுமையாக நடைபெறாமல் இழுபறியில் உள்ளது.

இதனை அடுத்து சூர்யாவை படத்தை விட்டு நீக்கி விட்டு வாடிவாசல் படத்திற்கு வேறொரு நடிகரை போட்டு நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அரசல் புரசலாக செய்திகள் வெளி வந்துள்ளது.

வாடிவாசல் படத்தின் புது ஹீரோ..

மேலும் வாடிவாசல் படத்தின் அறிவித்த பின்னர் வணங்கான் படத்திற்கு சூர்யா சென்ற நிலையில் வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்து விட்டார்.

அத்துடன் வணங்கான் படத்தில் இருந்து விலகிய சூர்யா வாடிவாசல் படத்தை ஆரம்பிக்காமல் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தை முடித்து தந்திருக்கிறார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபாவளிக்கு  வெளி வருவது உறுதி என்ற சூழ்நிலையில் இன்னும் படத்தின் சிஜி பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் தான் வெளியாகவில்லை என்று தெரிய வந்துள்ளது.

யார் தெரியுமா?

இந்த சூழ்நிலையில் விடுதலை படத்தை முடித்த கையோடு வாடிவாசல் படத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இருப்பதாக தெரிய வந்துள்ள நிலையில் அந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகி விட்ட நிலையில் படத்தை தயாரிக்க தானும் முன் வந்திருப்பதாக செய்திகள் அடிபடுகிறது.

அது மட்டுமல்லாமல் சூர்யாவிற்கு பதிலாக தனுஷ் நடிக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில் தற்போது டோலிவுட் நடிகர் ராம்சரனிடம் ரகசியமாக வெற்றிமாறன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.

இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் பல வருடங்களை வீணடித்து நொந்து போன ராம்சரண் வெற்றிமாறன் குறித்து விசாரித்தாரோ என்னவோ தெரியவில்லை அவரை அவாய்ட் செய்வதாக தெரிய வந்துள்ளது. 

இந்த சூழ்நிலையில் நடிகர் சூர்யா, ராம் சரணை சந்தித்து வெற்றிமாறன் பேசிய தகவல்கள் எப்படியோ அவருக்கு தெரிந்து விட செம கடுப்பில் இருக்கும் இவர் வாடி வாசலுக்கு தற்போது என்டு கார்ட் போட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து வெற்றிமாறன் எப்படி யாரை வைத்து இந்த படத்தை ஆரம்பிப்பார் என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version