ஜூராசிக் பார்க் டீமை இறக்கி இருக்கோம்… வாடி வாசல் குறித்து ஹாட் அப்டேட் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு!.

வெற்றிமாறன் திரைப்படங்கள் என்றால் அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. ஏனெனில் பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சாதாரண திரைக்கதை என்பதை தாண்டி அந்த திரைப்படத்தில் ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை வெற்றிமாறன் பேசியிருப்பார்.

திரை உலகிற்கு அறிமுகமான காலகட்டங்களில் இருந்தே வெற்றிமாறன் இதை கடைபிடித்து வருகிறார். அவரது முந்தைய திரைப்படங்களான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் மாதிரியான ஒவ்வொரு திரைப்படத்திலும் படத்தின் கதை என்பதை தாண்டி சமூகத்திற்கு தேவையான முக்கிய அரசியல் ஒன்றை பேசி இருப்பார் வெற்றிமாறன்.

வாடிவாசல்:

அதனை தாண்டி அந்த திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியையும் கொடுத்து வருகின்றன. இதனால் வெற்றிமாறன் மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெரும் ஒரு இயக்குனராக பார்க்கப்படுகிறார். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதால் வெற்றிமாறனிடம் இப்படி வரும் மாறுபட்ட சினிமா தாக்கத்தை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்து வெற்றிமாறன் இயக்கவிருக்கும் திரைப்படம் வாடிவாசல். சி.சு செல்லப்பா என்கிற எழுத்தாளர் எழுதிய வாடிவாசல் என்கிற நாவலின் தழுவலாக இந்த திரைப்படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன்.

அப்டேட் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு

இதற்கு முன்பு இதே மாதிரி பூமணி என்கிற எழுத்தாளர் எழுதிய வெக்கை என்கிற நாவலின் தழுவலாக அசுரன் திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் வெகு நாட்களாகவே வாடிவாசல் திரைப்படத்தை பற்றி பேசி வந்த நிலையில் அதன் படப்பிடிப்பு மட்டும் துவங்காமல் இருந்து வந்தது.

இதுக்குறித்து சமீபத்தில் கலைப்புலி எஸ்.தாணு கூறும்போது ,”போன மாதம் வாடிவாசல் திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தது. நான் சூர்யா ,வெற்றிமாறன் மூவரும் இணைந்துதான் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன்படி வெகு சீக்கரத்திலே வாடிவாசல் படத்தின் படபிடிப்பை துவங்க இருக்கிறோம்.

ஜூராசிக் பார்க் டீமை இறக்கி இருக்கோம்

இந்த படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முக்கியமானவை ஏனெனில் முழுக்க முழுக்க மாடுகள் கிராபிக்ஸ் முறையில்தான் காட்டப்பட இருக்கிறது. எனவே ஜுராசிக் பார்க் படத்தில் பணிபுரிந்த குழுவிடம் இதற்காக பேசியிருக்கிறோம்.

அவர்களை வைத்துதான் படத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுபோக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் கலைப்புலி எஸ் தாணு. ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் இது இன்னும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படம் முடிந்த பிறகுதான் வெற்றிமாறன் வடசென்னை 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பை துவங்குவார் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam