வேட்டையன் மனசிலாயோ பாடலில் இதை கவனிச்சீங்களா..? பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பஹத் பாஸில்,, ராணா டக்குப்பாட்டி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

போலீஸ் தொடர்புடைய கதையில் அதிரடி ஆக்சன் படமாக தயாரிக்கப்படுகிறது வேட்டையன். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் முதல் பாடலாக மனசிலாயோ என்ற பாடல் வெளியாகியிருக்கிறது.

முழுக்க முழுக்க மலையாள ஸ்டைல் பாடலாக இருக்கிறது. முற்றிலும் புதிய ஒரு பாடலாக இருக்கிறது. கொண்டாட தகுந்த பாடல் என ரசிகர்கள் இந்த பாடலுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

சூப்பர் சுப்பு, விஷ்ணு எடவன் உள்ள இந்த பாடலை மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை மூலம் பாட வைத்திருக்கிறார்கள் அவரின் மகன் யுகேந்திரன் அனிருத் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோரும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

அதிரடி துள்ளல் பாடலாக மலையாள ஸ்டைலில் வெளியாகி உள்ள இந்த பாடலுக்கு லைக்குகள் மற்றும் வியூஸ்சுகள் குவிந்து வருகின்றது.

இது ஒரு பக்கம் இருக்க ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான இந்தியன் 2 படத்தில் இடம்பெற்ற தாத்தா வராரே என்ற பாடலின் இசையை ஒத்து இந்த பாடலும் இருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு பாடலுக்கும் ஒரே மியூசிக் தான் போட்டு இருக்கிறார் அனிருத். நானும் ரஜினி ரசிகன் தான், இதை சொன்னால் என்னை திட்டுகிறார்கள் என ரசிகர் ஒருவர் தன்னுடைய twitter பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version