யுவன்சங்கர் ராஜா கிட்ட இருந்து அப்பட்டமான காப்பி… வேட்டையன் Manasilaayo பாடலில் அனிரூத் செய்த வேலை..!

தமிழ்நாட்டில் புரட்சி திரைப்படங்கள் எடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் தா.சே ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. ஜப்பான் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு ஜப்பான் மக்கள் பற்றி மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமாக ஜெய் பீம் இருந்தது.

மேலும் சீனாவிலும் இந்த திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த அளவிற்கு புகழ்பெற்ற படங்களை எடுத்த இயக்குனர் தா.செ ஞானவேல் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படம் வன்முறைக்கு எதிரான திரைப்படம் என்று கூறப்படுகிறது.

அப்பட்டமான காப்பி

ஏற்கனவே ஜெய் பீம் திரைப்படத்திலேயே காவலர்கள் செய்யும் அட்டூழியங்களை வெளிக்கொண்டுவரும் வகையில்தான் அந்த திரைப்படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். அதேபோலதான் இந்த படத்தின் கதைக்களமும் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன் பகத் பாசில் என்று பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இது ஒரு பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி வந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக உருவாகி வந்த வேட்டையன் திரைப்படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது.

வேட்டையன் பாடல்

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான மனுசிலாயோ என்கிற பாடல் என்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அனிரூத் இசையமைப்பில் வெளியாகியிருக்கும் இந்த பாடலில் அனிருத் பாடியும் இருக்கிறார்.

இந்த பாடலில் வரும் ஒரு சில வரிகளை மட்டும் ஏ.ஐ முறை மூலமாக மலேசியா வாசுதேவனை பாட வைத்திருக்கின்றனர். பாடகர்களில் மிக முக்கியமானவர் மலேசியா வாசுதேவன். இவர் பத்ரி, புன்னகை தேசம் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அனிரூத் செய்த வேலை

மேலும் இன்னும் சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் மலேசியா வாசுதேவன் நடித்திருக்கிறார். இந்த நிலையில் 27 வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படத்தில் ரஜினிக்கு இவர் பாடல் பாடியதாக கூறப்படுகிறது.

அதற்குப் பிறகு இவர் ரஜினிக்கு பாடல்களே பாடவில்லை. சில வருடங்களுக்கு முன்பு அவர் காலமாகிவிட்டார் இந்த நிலையில் ஏழை முறையை பயன்படுத்தி அவரின் குரலை இந்த பாடலில் பயன்படுத்தியிருக்கின்றனர் இதற்கு முன்பு யுவன் சங்கர் ராஜாவும் இதே முறையை பயன்படுத்தி தான் பவதாரணையின் குரலை கோட் திரைப்படத்தில் ஒரு பாடலில் வரவைத்து இருந்தால் அதை அப்படியே பின்பற்றி அனிருத்தம் செய்திருக்கிறார் இதனை அடுத்து யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் அனிருத் எதையுமே புதிதாக செய்ய மாட்டாரா? இப்படிதான் காப்பி அடிப்பாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version