இழுத்து போத்திகிட்டு தான் நடிச்சேன்.. ஆனா.. வெளிப்படையாக பேசிய நடிகை விசித்ரா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை விசித்ரா குணசித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாகவும் ஆண்டி ஹீரோயினியாகவும் பல படங்களில் நடித்து அசத்தியவர்.

இவர் பத்தாவது படிக்கும் போதே போர் கொடி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். எனினும் இவரது துரதிஷ்டம் அந்த படம் வெளியாகவில்லை. இதனை அடுத்து ஜாதிமல்லி என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பிரதாப் போத்தனின் ஆத்மா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

நடிகை விசித்ரா..

ஆத்மா படத்தில் ஆடிய இந்த நடனத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தமாக மாறிய இவர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முத்து படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர்.

மேலும் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடுவதோடு நின்று விடாமல் முத்து, ரசிகன், சுயம்வரம் போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவர் அண்மையில் விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் சீசன் 7-ல் கலந்து கொண்டிருக்கிறார்.

இதை ஷோவில் வாயாடி வனிதா அக்காவின் மகள் ஜோவிகா கலந்து கொண்டார். ஜோவிகா பத்தாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கு சென்று படிக்க விரும்பாததை அடுத்து கல்வியின் முக்கியத்துவம் பற்றி விசித்ரா கூற பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து வயது வித்தியாசம் பார்க்காமல் ஜோதிகா விசித்திராவை பேசிய பேச்சு இணையங்களில் வைரல் ஆகியது.

இத்தோடு திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராசாத்தி என்ற நாடகத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இதனை அடுத்து மேலும் பல ஆயிரம் கணக்கான ரசிகர்களை பிக் பாஸ் சீசனின் மூலம் பெற்றிருக்கக் கூடிய இவர் அண்மையில் விருது வழங்கும் விழாவில் தன்னை பற்றி பேசிய விஷயம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ள வகையில் அமைந்துவிட்டது.

இழுத்து போத்திக்கொண்டு தான் நடிச்சேன்..

இவர் நினைத்ததற்கு ஏறுமாறாகத்தான் தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது என்று கூறிய இவர் தலைவாசல் படத்தில் தலைவாசல் விஜய்யோடு நடிக்கும் போது அவர் தன்னோடு இணைந்து நடிக்க மிகவும் சிரமப்பட்டார் என்ற விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் இழுத்து போர்த்திக் கொண்ட படி தான் நடித்திருந்ததாக சொல்லி இருக்கக் கூடிய இவர் அந்தப் படத்தை தன்னால் என்றும் மறக்க முடியாது என்ற விஷயத்தையும் சொல்லிவிட்டார்.

வெளிப்படையாக பேசிய பேச்சு..

அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது மேக்கப் இல்லாமல் எப்படி இருந்தாரோ அது போலத் தான் ஒரு எதார்த்தமான பெண்ணாக வாழ நினைப்பதாகவும் சொல்லியிருக்க கூடிய இவர் தான் நினைத்த கதாபாத்திரம் தனக்கு இன்று வரை திரை உலகில் நடிக்க கிடைக்கவில்லை என்பதையும் சொல்லிவிட்டார்.

அப்படிப்பட்ட எதார்த்தமான கதாபாத்திரங்களை செய்ய தனக்கு இயக்குனர்கள் கட்டாயம் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கக்கூடிய இவர் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிக்ஸர்களை அடிப்பாரா? அல்லது மீண்டும் பெவிலியன் திரும்புவாரா? என்பது பொறுத்திருந்து பார்த்தால் மட்டும் தான் தெரியும்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version