வெற்றியைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை – இ வி கே எஸ் இளங்கோவன்

கடந்த சில நாட்களாக   பல கட்ட பரப்புரைகளுக்கு பின்பு நடந்து முடிந்த  ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன இதில்  இ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் அவரிடம் பேட்டி எடுத்த செய்தியாளர்களிடம் அவர் வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை என கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

செய்தியாளர்களிடம் அவர் கூறியது ‘  உயிரோடு கிழக்கு விடைத் தேர்தல் வெற்றி என்பது திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்,  மேலும் ராகுல் காந்தியின் மேல் தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ள ஆதரவிற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அதன் எதிரொலியாக இந்த வெற்றியை காண முடிகிறது.

இது பெரிய வெற்றி தான் என்றாலும் வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை. மகன் விட்டுச் சென்ற பணியை செயல்படுத்த வேண்டும் நான் உள்ளேன்  எனக் கூறினார்.

 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை திமுகவும் அதிமுகவும் தங்களை நிரூபிப்பதற்கான ஒரு களமாக மாற்றிக் கொண்டனர் இதன் காரணமாக தமிழ்நாட்டின் அத்தனை அமைச்சர்களும் அங்கே ஒரு ஒரு அமைச்சருக்கும் ஒரு வார்டு என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர்.

ஒரு ஓட்டுக்கு 3000 மற்றும் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் கொலுசு என பல பரிசு பொருள்கள் இரண்டு கட்சிகளாகவும் கொடுக்கப்பட்டது  என சமூக வலைதளங்களில் பலர் ஆதாரங்களுடன் குறிப்பிட்டாலும்,

ஒரு வழியாக தேர்தல் முடிந்து வெற்றி அறிவிப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. அதில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திரு இ வி கே இளங்கோவன் அவர்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருக்கிறார்.

இதுபோல சுவாரசியமான பல அரசியல் தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …