அஜித் பட டைட்டில் “விடாமுயற்சி” – போஸ்டரில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா..? – மாஸ் அப்டேட்..!

விடாமுயற்சி ( Vida Muyarchi ) நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கக்கூடிய புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு நடிகர் அஜித்தின் பிறந்த நாளான (  மே 1 ) இன்று வெளியாகி இருக்கிறது.

படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பிட்டு இருக்கின்றனர். அஜீத் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த தலைப்பு அறிவிப்பு. ஒரு போஸ்டருடன் வெளியாகி இருக்கிறது.

Vida Muyarchi

இந்த போஸ்டரில் படத்தின் தலைப்பு ஒரு பால்வெளியின் மேல் இருப்பது போல இருக்கின்றது. மேலும் போஸ்டரில் இருக்கக்கூடிய சில விஷயங்களை கவனிக்கும் பொழுது படம் ட்ரஷர்ஹண்ட் ஜானரில் உருவாக இருக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள்.

படத்தில் இருக்கக்கூடிய வட்ட வடிவிலான Maze கொண்டு ரசிகர்கள் இதனை கணித்திருக்கிறார்கள். சமீபத்தில் நடிகர் அஜித்தின் உலக சுற்றுப்பயணம் குறித்த ஆவண படத்தை பிரபல OTT நிறுவனமான NETFLIX தயாரிக்க இருக்கிறது. அதற்கான உரிமத்தை பெற்றிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Vida Muyarchi

இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தின் பட தலைப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. எனவே நடிகர் அஜித் தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

படத்தின் தலைப்பு அறிவிப்பை ஒட்டி சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டமான மன நிலையில் உலவி கொண்டிருக்கின்றனர். மேலும், விடாமுயற்சி என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கிலும் இடம் பெற செய்திருக்கின்றனர்.

Vidamuyarchi

மட்டுமல்லாமல் படத்தின் போஸ்டரை வைத்து படத்தின் ஜானரையும் லாவகமாக கண்டுபிடித்துள்ளனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …