விடுதலை 2 எப்போ வருது தெரியுமா?.. கூடவே இன்னொரு சர்ப்ரைஸும் இருக்கு.!

பொதுவாக சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் முதல் படம் சிறப்பான திரைப்படமாக அமைந்துவிடுவது கிடையாது. சொல்லப்போனால் இப்பொழுது பெரிய நடிகர்களாக இருக்கும் பலருக்கும் முதல் திரைப்படம் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

ஆனால் கதாநாயகனாக முதல் திரைப்படத்திலேயே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகர் சூரி. இவர் நடித்த விடுதலை திரைப்படம் சூரிக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

நடிகர் சூரி:

இதன் கதையம்சத்தை பொறுத்தவரை முதல் பாகத்தில் சூரி கதாநாயகனாக இருப்பார் விஜய் சேதுபதி சின்ன சின்ன காட்சிகளில் மட்டுமே வந்து கொண்டிருப்பார். இந்த நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிதான் கதாநாயகனாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது கதாநாயகனாகதான் அதில் சூரி இருப்பார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. விடுதலை படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்து விட்டன. சில சர்வதேச சினிமா விழாக்களிலும் இந்த படம் ஒளிபரப்பப்பட்டது. உலக அளவில் தற்சமயம் ஏற்கனவே அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது விடுதலை இரண்டாம் பாகம்.

விடுதலை 2 எப்போ வருது

இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் இன்னும் சில காட்சிகளை படம் பிடித்து சேர்க்க வேண்டும் என்கிற காரணத்தினால் திரையில் வெளியிடாமல் இருந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

இதனை அடுத்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். வடசென்னை 2 போலவே விடுதலை படமும் வராமலே போய் விடுமோ என்பது ரசிகர்களின் கவலையாக இருந்தது.

இன்னொரு சர்ப்ரைஸும் இருக்கு

ஆனால் தற்சமயம் கண்டிப்பாக விடுதலை 2 வரும் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. விடுதலை 2 திரைப்படத்தை பொருத்தவரை அதில் வாத்தியார் எனப்படும் விஜய் சேதுபதியின் பழைய கதை என்னவென்பது வர இருக்கிறது. மேலும் அந்த கதையின் மூலமாக தான் எப்படி இப்படி ஒரு அரசுக்கு எதிரான நபராக வாத்தியார் மாறினார் என்கிற விஷயமும் காட்டப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது.

விடுதலை படத்தின் முதல் பாகத்திலேயே போலீஸ் அடக்குமுறை தொடர்பாக பல விஷயங்களை வெற்றிமாறன் வெளிப்படையாக காட்டி இருந்தார். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அது இன்னமும் பெரிய அளவில் காட்டப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்சமயம் விடுதலை படம் வெளியீடு தொடர்பாக சில அப்டேட் வெளிவந்திருக்கிறது. அதன்படி இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இளையராஜா இந்த திரைப்படத்தில் 5 பாடல்கள் இசையமைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாடல்களும் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில் விடுதலை படம் மூன்றாம் பாகத்திற்கான பேச்சு வார்த்தைகளும் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதில் கதை என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களுக்கு ஆவலை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version