முன்னாள் மாமனாரும் முன்னாள் மருமகனும் இணைந்து பாடினால் இணைவார்களா? ஐஸ்வர்யா மற்றும் தனுஷ்!

சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவை விரும்பி திருமணம் செய்துகொண்ட தனுஷின் மணவாழ்க்கை 18 ஆண்டுகளாக நீடித்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து செய்து கொண்டதினால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த சூப்பர் ஸ்டார்.

திரை உலகில் பலரும் அந்த ஜோடிகளை இணைத்து வைப்பதற்காக பாடுபட்ட போதிலும் பலன்  ஒன்றும் கிடைக்கவில்லை எந்த நிலையில்  விவாகரத்துக்குப் பின்பு தனுஷிற்கு திரைப்படத்தில் ஏகப்பட்ட சறுக்கல்கள் ஏற்பட்டது.

 இந்த சறுக்கல்களை சரிசெய்யும் விதமாக தற்போது வெளிவந்த திருச்சிற்றம்பலம் படம் இவருக்கு சற்று ஏற்றத்தைக் கொடுத்தது.

 இதனைத் தொடர்ந்து திரை உலகில் தன் இடத்தை தக்க வைக்க உதவும்  படங்களை தேர்வு செய்து நடித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார் தனுஷ். இதனை அடுத்து இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் இவர் ஒரு பாடலை பாடுவதாக தெரிகிறது.

 மேலும் இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் இளையராஜா இணைந்து ஒரு காம்போ கொடுக்கப் போவதாக வந்த அறிவிப்பார் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரின் மத்தியிலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை  கிளப்பி இருக்கிறது.

 முன்னாள் மாமனாரும் தனுஷும் ஒரே படத்தில் இணைந்து செயல்படுவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய தோடு இவர்களின் இணைவால் ஐஸ்வர்யா வாழ்வில் மாற்றம் ஏதேனும் கிட்டுமா? என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது.  தனுஷ் பாடும் இந்தப் படத்தில் தான் பாடுவது தனக்கே பிடிக்கவில்லை என்பது போல ரஜினிகாந்த் நினைப்பது தெரியவந்துள்ளது.

 மன்னன் திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி இந்தப் படத்துக்காக பாடப் போகிறார். இளையராஜாவின் கட்டளையை மறுக்க முடியாமல்தான் எதை செய்கிறார் என்பதை அனைவரும் புரிந்து கொண்டார்கள்.

எனினும் இவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்து செயல்பட்டு பாடல்களைப் பாடுவதால் தனது மகளின் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் அல்லது மேஜிக் நிகழுமா என்பது போல ரசிகர்கள் நினைக்கிறார்கள் அந்த மேஜிக் விரைவாக நடந்தால் அனைவருக்கும் சந்தோசம் தான்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …