பொது இடத்தில் கணவருடன் நடிகை வித்யா பிரதீப் பார்த்த வேலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

கேரளாவை சேர்ந்த அழகு பதுமையாக சினிமாவில் குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் வித்யா பிரதீப்.

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா என்ற இடத்தில் பிறந்து வளர்ந்த வித்யா பிரதீப் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சைவம் திரைப்படத்தின் மூலமாக குணச்சித்திரன் நடிகையாக அறிமுகமாகி இருந்தார் .

2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் பேபி சாராவின் அம்மாவாக இந்த திரைப்படத்தில் வித்யா பிரதீப் நடித்திருந்தார்.

சைவம் படத்தில் வித்யா பிரதீப்:

அந்த ரோல் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற ரோலாக பார்க்கப்பட்டது. அதன் மூலம் பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்தார் வித்யா பிரதீப்.

அந்த படத்தை தொடர்ந்து பசங்க 2 திரைப்படத்தில் நடித்திருந்தார் . அதுவும் மிகப்பெரிய அளவில் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது.

முன்னதாக சினிமாவில் வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்த இவர் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

அதன் மூலம் தான் அவருக்கு திரைப்பட வாய்ப்பே தேடிவந்ததாம். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமானின் இசை ஆல்பத்தில் நடித்து பெரும் புகழ் பெற்ற அவர் அதிபர் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் எதிர் நாயகியாக கூட நடித்திருந்தார் .

வித்யாவின் திரைப்படங்கள்:

இவரது நடிப்பில் வெளிவந்த சைவம் ,அதிபர் , பசங்க 2 , ஒண்ணுமே புரியல , இரவுக்கு ஆயிரம் கண்கள் கண்கள் , களரி , மாரி 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பெரும் புகழ்பெற்றார் .

இதனிடையே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த நடிகை வித்யா பிரதீப் 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி என்ற தொடரில் ஆனந்தி ரோலில் நடித்திருந்தார்.

இதன் மூலம் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாகவும் வித்யா பிரதீப் வலம் வந்து கொண்டு இருந்தார்.

திரைப்படங்களில் மிகவும் நேர்த்தியான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடத்து வரும் வித்யா துளி கூட கவர்ச்சி காட்டாமல் மிகவும் பவ்யமான நடிகையாக நடித்து பெயர் எடுப்பார்.

டாக்டர் பட்ட பெற்ற வித்யா பிரதீப்:

நடிப்பை தாண்டி இவர் பயோ டெக்னாலஜியில் முதுகலை அறிவியல் படிப்பை முடித்தார். மேலும் சென்னையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் ஸ்டெம் செல்கள் பற்றி ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

தற்போது இவர் அமெரிக்காவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். 13 வருடங்களுக்கு முன்பே நடிகை வித்யா மைக்கேல் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பொது இடத்தில் ரொமான்ஸ்:

இவருடைய கணவர் பிரதீப் அமெரிக்காவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகும் இளமை மாறா அழகியான வித்யா பிரதீப் தங்களுடைய 11வது திருமண நாளை கொண்டாடும் விதமாக பொது இடத்தில் கணவருக்கு உம்மா கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சிங்கிள் பசங்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளது. இன்னும் சில 2K கிட்ஸ்கள் என்னது வித்யா பிரதீப்க்கு கல்யாணம் ஆகிடுச்சா..? என அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version