தன் மனைவியுடன் ஊர் சுற்றியவரை விழுந்து விழுந்து புகழ்ந்து தள்ளும் விக்னேஷ் சிவன்..!

அறிமுகமான வேகத்தில் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் முதல் படத்தில் நிறைய நடிகைகள் வரவேற்பை பெற்றாலும் கூட அதை தக்க வைத்துக் கொண்டு சினிமாவில் பெரும் இடத்தை பிடிப்பது என்பது அனைத்து நடிகைகளுக்கும் சாத்தியப்படுவது கிடையாது.

அப்படி இருக்கும் பொழுது நயன்தாரா தொடர்ந்து தனக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் வரவேற்பை பயன்படுத்திக் கொண்டு அதற்கு தகுந்தார் போல திரைப்படங்களை நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டார்.

இப்பொழுதும் நயன்தாராவிற்கு நடிக்கும் திரைப்படங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தினால்தான் அவர் சம்பளத்தையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறார். என்னதான் நயன்தாரா நடிப்பு விஷயங்களில் இவ்வளவு கவனமாக இருந்தாலும் காதல் விஷயங்களில் நிறைய சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்று கூறலாம்.

காதல் விவகாரங்கள்:

ஆரம்ப காலகட்டங்களில் இருந்து நயன் வேறு வேறு நடிகர்களோடு காதல் விஷயத்தில் கிசுகிசுக்காகப்பட்டிருக்கிறார். அதில் முக்கியமான நடிகர் என்றால் நடிகர் சிம்புவைதான் கூற வேண்டும். நடிகர் சிம்புவுக்கும் நயன்தாராவிற்கும் இடையே வல்லவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் காதல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

அதற்குப் பிறகு தொடர்ந்து அவர்கள் காதலித்து வந்து கொண்டிருந்தனர் ஆனால் என்ன காரணத்தினாலோ தெரியவில்லை. அதற்குப் பிறகு நயன்தாரா சிம்புவை விட்டு பிரிந்து விட்டார். பிறகு சில காலங்கள் காதல் எதுவும் இல்லாமல் இருந்த நயன்தாரா.

இடையில் இவர் பிரபுதேவாவை காதலித்ததாக பேச்சுக்கள் இருந்தன. பிறகு அந்த காதலும் தோல்வியில் முடியவே இறுதியாகதான் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. ஆனால் நடிகர் விக்னேஷ் சிவனுக்கும் சிம்புவுக்குமே ஒரு பந்தம் உண்டு.

விக்னேஷ் சிவன் நட்பு:

விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் போடா போடி. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தது சிம்புதான் அப்போதே விக்னேஷ் சிவனுக்கு ஆதரவளித்து வந்தவர் நடிகர் சிம்பு.

அந்த திரைப்படத்திலேயே ஒரு சில பாடல்களுக்கான வரிகளை விக்னேஷ் சிவன்தான் எழுதியிருப்பார். அந்த வரிகளை அவர் எழுதுவதற்கு அவரை தூண்டியவர் வேறு யாருமில்லை நடிகர் சிம்பு தான். எனவே விக்னேஷ் சிவன் சிம்பு இல்லை என்றால் ஒரு பாடல் ஆசிரியராக தனக்கு மதிப்பு கிடைத்திருக்காது என்று பல மேடைகளில் சிம்புவை புகழ்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்,

தனது மனைவியுடன் ஊர் சுற்றிய நபரை இப்படி பல இடங்களில் விக்னேஷ் சிவன் எப்படி புகழ்ந்து பேசலாம் என்று இது குறித்து கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version