கைவிடப்பட்ட விஜய் 69 படம்..? விஜய் எடுத்த அதிரடி முடிவு..! பிரபலம் வெளியிட்ட தகவல்..!

நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி அரசியலில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக கட்சி தொடங்குவதற்கு முன்னே சமூக மக்கள் நலன் சார்ந்த பல சமூக நல அக்கறையுடன் பல்வேறு விஷயங்களை செய்து வந்தார்.

விஜய்யின் அரசியல் பிரவேசம்:

பொதுத்தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா பிரம்மண்டமாக ஏற்பாடு செய்து மாணவர்களையும் அவரது பெற்றோர்களையும் கௌரவித்திருந்தார்.

அத்துடன் தான் அரசியலுக்கு வந்தால் சாதி, மதம் இல்லாத சூழலை உருவாக்கி இந்த சமூகத்தை நல்ல நோக்கத்தோடு கொண்டு செல்வேன் என்றும் விஜய் கூறி இருந்தார்.

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு அவரது தொண்டர்கள் உறுதுணையாக இருந்து மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்கள் .

“கோட்” படம் தான் விஜய்யின் கடைசி திரைப்படம்:

இப்படியாக விஜய் மும்முரமாக அரசியல் களத்தில் இறங்கி தீவிரம் காட்டி வரும் நிலையில் தற்போது கோட் திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக 69 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. அதுதான் விஜய்யின் கடைசி திரைப்படம் என்றும் அந்த படத்திற்கு பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட்டு விடுவார் என்றும் தகவல்கள் வெளியாகிறது.

ஆனால், தற்போது கிடைத்த தகவலின் படி விஜய் நடிக்கும் கடைசி படம் கோட் படமே என்று கூறப்படுகிறது இதனால் 69 திரைப்படத்தை கைவிடப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அதாவது, நடிகர் விஜய் தன்னுடைய 69ஆவது படத்தை முடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட இருக்கிறார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.

கடைவிடப்பட்டதா தளபதி 69?

இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய 69 ஆவது படத்தை நடிக்கப் போவதில்லை என்றும் கோட் திரைப்படம் வெளியானதும் முழுமையாக அரசியலில் ஈடுபட முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

அதே சமயம் விஜய் 69 வது படத்தை வேறு ஏதாவது தயாரிப்பு நிறுவனம் தயாரித்தால் ரிலீஸ் நேரத்தில் நிச்சயமாக பிரச்சனை செய்வார்கள் சிக்கல் கொடுப்பார்கள்.

எனவே வேறு நிறுவனம் தயாரித்தால் அவர்களுக்கு கணிசமான நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் தன்னுடைய சொந்த நிறுவனத்திலேயே இந்த படத்தை தயாரிக்கலாம் என்று நடிகர் விஜய் முடிவு எடுத்திருக்கிறார் என்றும் கூறுகிறார்கள் .

மேலும், இந்த படத்தை விரைந்து படமாக்கி முடிக்க அதற்கான முன்னேற்பாடுகளை படக்குழு ஏற்கனவே முடித்துவிட்டு இருக்கிறது என்றும் தகவல் தெரிவிக்கின்றன .

இப்படி வெவ்வேறான கருத்துக்கள் இணைய பக்கங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்த போது விஜய் 69 திரைப்படம் கைவிடப்படவில்லை.

அது பற்றி வெளியாக கூடிய தகவல்கள் அனைத்துமே ஆதாரமற்றவை தயாரிப்பு நிறுவனத்தை மாற்றும் திட்டமும் கிடையாது. விஜய்யின் 69 ஆவது படம் நிச்சயமாக உருவாகும் என தெரிவிக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version