தல படத்தில் தளபதி விஜய்..! – செம்ம ஹாட் அப்டேட்..! – ரசிகர்கள் ஆரவாரம்..!

 இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் வீரராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. இவரது ஹெலிகாப்டர் ஷாட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனது .இவர் சென்னை கிங்ஸின் தலைவராக இருந்து பல வெற்றிகளை டுவென்டி டுவென்டி கிரிக்கெட்டில் பெற்றுத் தந்தவர்.

 தமிழில் முன்னணி நடிகராக திகழக்கூடிய தளபதி விஜய்  தெலுங்கு தயாரிப்பாளரான ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு படப்பிடிப்பில் படு பீஸியாக கொண்டிருக்கிறார்.

 இந்த படத்தில் இவர் கண்டிப்பாக தன்னுடைய நடிப்பு திறனை மெய்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில் தற்போது இருக்கிறார்.

 ஏற்கனவே இவர் நடித்த பிஸ்ட் படம் மாபெரும் தோல்வியை தழுவி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்தது. அதேபோல் முன்பு வெளிவந்த படங்கள் சரியான நிலையில் ஓடி வசூலையும் கொடுக்காததால் இந்த படத்தில் அவர் கண்டிப்பாக வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் மிக கடுமையாக உழைத்து வருகிறார்.

 அடுத்து இவர் மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து முடிந்துவிட்டது.

அது பற்றிய அறிவிப்பு இதுவரை வெளிவராத நிலையில்  அதற்கான காரணம் வாரிசு படப்பிடிப்பு முடிந்த பின்பு அந்த படத்தின் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதில் நடிகர் விஜய் உறுதியாக இருக்கிறார்.

 மேலும்   ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த படமானது விஜயின் 68 படமாக இருக்கும் என தெரிகிறது.

தற்போது புதிதாக தயாரிப்பு கம்பெனி ஒன்றை கிரிக்கெட் கேப்டனாக தோனி தொடங்கியிருக்கிறார். இந்த கம்பெனியின் படத்தில் தளபதி விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என்று இவர் மிகவும் விருப்பப்பட்ட வருவதாக தெரியவந்துள்ளது.

 தோனிக்கு ராசியான எண் 7 என்பதால் விஜய்யின் 70 வது படத்தை தயாரிக்க தோனி அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்ற தகவல் இப்போது கொடிகட்டிப் பறக்கிறது.

 இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை சம்மந்தப்பட்டவர்கள் அறிவிப்பை அறிவித்தால் மட்டுமே அதனுடைய உண்மையான நிலவரம் தெரியவரும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …