விஜய்யுடன் ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுக்க காரணம் இது தான்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

சினிமாவில் சில ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்று நடிகைகள் பலரும் நேர்காணலில் ஆசையாக சொல்வதுண்டு. சிலர் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பார்கள். சிலர் கமலுடன் அடிக்க வேண்டும் என்பார்கள். சிலர் விஜய், சிலர் அஜித்குமார், சிலர் சிம்பு, சிலர் விஜய் சேதுபதி என அவர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறோம் என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.

அதேபோல் சில நடிகைகளுடன் நடிக்க நடிகர்களும் ஆசைப்படுவார்கள். அதுவும் பிரபலமான முன்னணி நடிகர்களுக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கும்.

ரஜினிகாந்த் நீண்ட நாள் ஆசை

உதாரணமாக நடிகர் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வம் காட்டினார். அதற்காக அவர் மொத்தம் நான்கு படங்களில் தன்னுடன் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பு விடுத்தார்.

அதாவது சந்திரமுகி, படையப்பா, பாபா, சிவாஜி, போன்ற 4 படங்களில் முயற்சித்த நிலையில் கடைசியாக ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அதுவும் அது இயக்குனர் ஷங்கர் இயக்கிய படம் என்பதாலும், அவர் ஏற்கனவே ஜீன்ஸ் என்ற படத்தில் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்தவர் என்பதாலும், இந்த படத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் சம்மதித்தார்.

30 வயது மூத்தவர்

என்னதான் பெரிய சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும், தன்னைவிட 30 வயது அதிகமாக உள்ள ஒரு நடிகருடன் ஜோடியாக நடிக்க, சில நடிகைகள் விரும்ப மாட்டார். இது எல்லாருக்குமே இயல்பான ஒன்றுதான்.

அதுவும் ஐஸ்வர்யாராய் போன்ற உலக அழகி பட்டம் பெற்ற ஒருவர், ரஜினி போன்ற ஒரு வயதான ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்பது, என்னதான் மாஸ் ஹீரோவாக அவர் இருந்தாலும் உண்மையில் அவருடைய வயது என்பதை ஒரு பெண்ணாக இருந்து யோசிக்க தான் செய்வார். அவருடன் நடிப்பதா, வேண்டாமா என்பதை யோசிக்கவே செய்தார்.

நடிகர் விஜய்

அந்த வகையில் ரஜினியுடன் முதலில் நடிக்க மறுத்தவர்தான் ஐஸ்வர்யா ராய். அதேபோல் நடிகர் விஜயுடனும் ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்திருக்கிறார் என்ற தகவல் இப்போது வெளிவந்துள்ளது.

ஐஸ்வர்யா ராய்

நடிகர் விஜயுடன் அவர் நடிக்க மறுத்ததற்கு காரணம், ரஜினிக்கு எப்படி அதிக வயதானவர் என்று மறுத்தாரோ, அதற்கு நேர்மாறாக விஜயுடைய இளம் வயது தோற்றம் குறித்து ஐஸ்வர்யா ராய் யோசித்திருக்கிறார். இளமையான தோற்றமே விஜயுடன் நடிக்க முடியாமல் ஐஸ்வர்யா ராயை தடுத்திருக்கிறது என்பதும் ஒரு உண்மைதான்.
ஆனால் விஜய் நடித்த தமிழன் படத்தில், ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பகீரத முயற்சி நடந்துள்ளது.

தமிழன் படத்தில்…

நடிகர் விஜயின் கால்சீட்டை பெற வேண்டும் என்பதற்காக தமிழன் படத்தின் இயக்குனர், நடிகர் விஜய்யிடம் சென்று இந்த படத்தில் உங்களுக்கு ஹீரோயினாக ஐஸ்வர்யாராயை ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம் என கூறியிருக்கிறார்.
விஜயும் ஐஸ்வர்யா ராய் உடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையில் இருந்திருக்கிறார் எனவே சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

சின்ன பையன் போல…

ஆனால் கடைசியில் நடிகர் விஜயுடன் நடிக்க மறுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய் இதற்கு என்ன காரணம் என்றால் அப்போது நடிகர் விஜய் ஐஸ்வர்யா ராய் விட சின்ன பையன் போல இருந்தார்.

அக்கா போல…

கண்டிப்பாக விஜய்க்கு நான் ஜோடியாக நடித்தால் எதிர்மறையான விமர்சனங்கள் வரக்கூடும். நான் அவருக்கு அக்கா போல இருக்கிறேன் என கூட கருத்துக்கள் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது போன்ற காரணங்களை முன்னிறுத்தி நடிகை ஐஸ்வர்யா ராய் விஜய் உடன் நடிக்காத மறுத்திருக்கிறார் என்று பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோஷப் அவர்கள் சமீபத்தில் தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்

விஜய்யுடன் ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுக்க காரணம், விஜய் சின்ன பையன் போல இருந்ததுதான் என நீண்ட கால ரகசியத்தை உடைத்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version