இதனால் தான் நான் செருப்பு அணிவதே இல்லை.. விஜய் ஆண்டனி சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக திகழும் விஜய் ஆண்டனி திரைப்படங்களுக்கு இசையமைப்பதோடு நின்று விடாமல் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

1975-ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்த இவர் பிரபல எழுத்தாளரான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேரன் ஆவார். 

மேலும் இவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்த திரைப்படமான டிஸ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார். எனினும் முதல் முதலாக இசையமைத்த திரைப்படம் சுக்ரன் என்பது பலருக்கும் தெரியாது.

நடிகர் மற்றும் இசை அமைப்பாளரான விஜய்..

நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக விஜய் ஆண்டனி தமிழ் படம் மட்டுமல்லாமல் கன்னட படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் 2009 – ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்கான டைம்ஸ் ஆப் இந்தியாவிற்காக தயாரித்த நாக்க முக்கா என்ற வணிகப் படத்திற்காக பெற்றிருக்கிறார்.

மேலும் 2016-இல் வெளி வந்த பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்ட இவர் தற்போது தமிழில் முன்னணி நடிகராக முன்னேறி இருக்கிறார்.

நான் செருப்பு அணிவதில்லை..

இவர் தனது மூத்த மகளின் இழப்புக்குப் பிறகு திரை உலகில் அதிக அளவு கவனத்தை செலுத்தி வருவதோடு தற்போது தொடர்ந்து படங்களில் நடிப்பது இசையமைப்பது இசை கச்சேரிகளை நடத்துவது என பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசும் போது நான் திடீரென செருப்பு இல்லாமல் நடப்பது ஏன் என்று பலரும் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கான பதிலை இப்போது தர போகிறேன் என்று சொல்லி ஆச்சரியம் தரக் கூடிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர் செருப்பு போடாமல் இருப்பதால் மனதுக்கு அமைதி ஏற்படுகிறது. இது உடல் நலத்திற்கும் மிகவும் சிறந்தது. நமக்குள் தன்னம்பிக்கை வளர்க்க இது உதவி செய்வதாக சொன்ன தகவல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரலான விஷயங்கள்..

அத்தோடு நின்று விடாமல் வாழ் நாள் முழுவதும் செருப்பு போடாமல் இருக்க விரும்புவதாக சொன்ன விஷயம் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேலும் செருப்பு போடாமல் இருப்பதால் சந்தோஷத்தை கொடுக்கிறது என்று சொன்னதை அடுத்து செருப்பு அணியாமல் வெறும் காலில் நடப்பதின் மூலம் இத்தகைய நன்மைகள் கிடைக்கும் என்பதை இது வரை யாரும் இப்படி சொன்னதில்லை என்று ரசிகர்கள் பேசி இருக்கிறார்கள்.

அத்தோடு அந்தக் காலத்தில் பெரியவர்கள் செருப்பு அணியாமல் இதனால் தான் நடந்திருக்கிறார்களா?  இந்த விவரம் தெரியாமல் நாம் இருந்து விட்டோமே என்று பலரும் புலம்பி இருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்களோ வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்க வேண்டுமென்றால் இனி மேல் விஜய் ஆண்டனி போல் செருப்பு அணியாமல் நடந்து செல்லுங்கள் கட்டாயம் சந்தோஷம் கிடைக்கும் என்பதை நக்கலாக சொல்லி இருக்கிறார்கள்.

தற்போது இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக மாற்றி இருப்பதோடு விவரம் அறியாத நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை பகிர்ந்து இணையத்தில் அதிக அளவு படிக்கின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version