இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் படத்தின் டீசர்…!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கும் விஜய் ஆண்டனி ஒரு சிறந்த இசையமைப்பாளரும் கூட. ஆரம்ப நாட்களில் சில படங்களுக்கு இசையமைத்தவர் பின் நடிகராக களம் இறங்கினார்.

 இவர் நடிப்பில் பல வித்தியாசங்களை காட்டக்கூடியவர். அது மட்டுமல்லாமல் வித்தியாசமான கதை அம்சம் நிறைந்த கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர். அந்த வரிசையில் இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் பெருமளவு பேசப்பட்டது.

 இதனை அடுத்து தமிழ் படம் எடுத்த இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் தான் ரத்தம். படத்தின் பெயரை சற்று வித்தியாசமாக இருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது. இந்த படத்தில் மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 ஏற்கனவே தமிழ் படம் மூலம் தனது வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்திய இயக்குனர் சி எஸ் அமுதன் இந்த ரத்தம் படத்திலும் ஏதாவது புதுமையான ஒன்றை ரசிகர்களுக்கு விட்டுச் சென்று இருப்பார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இந்தப் படத்தில் ஜெகன் கிருஷ்ணா, நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்காக கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையை கண்ணன் அமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் பக்காவாக வந்திருக்கிறது என்று பட குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ந்த ரத்தம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது இதில் வெற்றிமாறன், பா ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகிய மூன்று பேரும் சிறப்பு தோற்றத்தில் இடம் பெற்றுள்ள இந்த டீசர் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றிமாறன், பா ரஞ்சித், வெங்கட் பிரபு இந்த சிறப்பு தோற்றத்தில் எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதை உடனடியாக காண வேண்டும் என்ற உத்வேகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 இதனை அடுத்து இந்தப் படம் வெற்றி படமாக நிச்சயம் விஜய் ஆண்டனிக்கு அமையும் என்று அவரது ரசிகர்கள் இப்போதே வாழ்த்துக்களை தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …