இதால அடிக்கவா.. செருப்பை எடுத்த நடிகை.. விஜய் ஆண்டனி முன்பே தொகுப்பாளருக்கு நடந்த சம்பவம்..

தற்சமயம் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒரு நடிகராக விஜய் ஆண்டனி மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி இருக்கும் இடமே தெரியாது என்று கூறலாம்.

அந்த அளவிற்கு பெரிதாக மக்கள் மத்தியில் தோன்றவே மாட்டார். தமிழ் சினிமாவிற்கு சாதாரண சௌண்ட் இன்ஜினியராக வேலைக்கு வந்து அதன் மூலமாக இசையமைப்பாளராகி இப்பொழுது கதாநாயகன் தயாரிப்பாளர் என்று பலவித விஷயங்களை செய்யக்கூடியவராக விஜய் ஆண்டனி இருந்து வருகிறார்.

இதால அடிக்கவா

தன்னுடைய திறமையை மட்டுமே பயன்படுத்தி இப்படியான ஒரு உயரத்தை விஜய் ஆண்டனி பிடித்திருக்கிறார். பெரும்பாலும் விஜய் ஆண்டனி திரைப்படங்களில் கூட மிகவும் சாந்தமான ஒரு நபராகதான் இருப்பார். யாரிடமும் அதிகம் பேசாத ஒரு கதாபாத்திரமாக தான் அவரது கதாபாத்திரமே இருக்கும்.

ஒரு ஜாலியான திரைப்படம் ஒரு காமெடியான திரைப்படம் என்பதெல்லாம் அவருக்கு பெரிதாக ஒர்க்அவுட் ஆகாது என்று கூறலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவ்வளவுக்கும் மாறுபட்ட ஒரு நபராக விஜய் ஆண்டனி மாறி இருக்கிறார்.

செருப்பை எடுத்த நடிகை

சினிமாவில் ஆரம்ப கட்டங்களில் பேட்டிகள் என எதில் கலந்து கொண்டாலும் விஜய் ஆண்டனி அவ்வளவு வெளிப்படையாக பேசிப் பார்க்க முடியாது ஆனால் அவரின் மகளின் இறப்பு என்பதே விஜய் ஆண்டனியின் மனநிலையை பெரிதாக மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது.

அதற்குப் பிறகு வாழ்க்கை என்ன என் வாழ்க்கை என்றால் என்ன என்பதை அவர் புரிந்து கொண்டார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன அதை தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

தொகுப்பாளருக்கு நடந்த சம்பவம்

எனவே சமீபகாலமாக அவர் பங்குபெறும் பேட்டிகளில் எல்லாம் மிகவும் ஜாலியாக அந்த பேட்டியை அவர் கொண்டு செல்வதை பார்க்க முடியும். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்து வரும் ஹிட்லர் திரைப்படத்தின் பிரமோஷன்காக ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார் நடிகர் விஜய் ஆண்டனி.

அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரியா சுமன் மற்றும் படத்தின் இயக்குனர் தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேட்டி மிகவும் ஜாலியாக சென்று கொண்டிருந்தது. அப்பொழுது விஜய் ஆண்டனி கதாநாயகியை கலாய்க்க வேண்டும் என்பதற்காகவே தொகுப்பாளர் கேட்கும் கேள்விக்கு நீங்கள் சரியாக பதில் அளிக்கவில்லை என்றால் அவரது கன்னத்தில் செல்லமாக தட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதனை கேட்ட நடிகை கையால் தட்டலாமா அல்லது செருப்பால் தட்டலாமா என்று செருப்பை எடுக்க சென்று இருக்கிறார் அதனை பார்த்த அந்த தொகுப்பாளர் பீதி அடைந்து உள்ளார் இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன விஜய் ஆண்டனி இவ்வளவு ஜாலியாக மாறிவிட்டார் என்று இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version