இந்த பாட்டோட ரீமேக் தான் என் உச்ச மண்டையில பாட்டு.. போட்டு உடைத்த விஜய் ஆண்டனி..

விஜய் ஆண்டனி 1975 இல் நாகர்கோவிலில் பிறந்த இவர் 7 வயது இருக்கும் போதே தந்தையை இழந்தவர். அது மட்டுமல்லாமல் மிகப் பழமையான எழுத்தாளரான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளு பேரனாக திகழ்வது பலருக்கும் தெரியாது.

இவர் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி இசை அமைப்பாளராக வலம் வந்ததோடு தற்போது நடிப்பிலும் அனைவரையும் கவர்ந்து இவருக்கு என்று ஒரு ரசிகர் படையை உருவாக்கி இருக்கிறார்.

விஜய் ஆண்டனி..

ஆரம்ப காலத்தில் சவுண்ட் இன்ஜினியராக பணி புரிந்த இவர் பல ஆவணப் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதனை அடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் இவரை டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசை அமைக்க அழைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: நடிகை அம்பிகாவின் லீலைகள்.. அலறி ஓடிய கணவர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

இந்த படத்தை இசை அமைப்பதற்கு முன்பே சுக்ரன் என்ற திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்து இருந்தார். தமிழ் படம் மட்டுமல்லாமல் இசை ஆல்பங்களுக்கும் இசையமைத்து இருக்கக்கூடிய இவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்.

மேலும் 2009 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதைச் சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த நாக்க முக்கா என்ற வணிக படத்திற்காக பெற்றிருக்கிறார்.

இவர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளி வந்த பிச்சைக்காரன் திரைப்படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு நடிகராக உறுதிப்படுத்தி பெருமை இவருக்கு உண்டு.

இந்தப் பாட்டோட ரீமேக் தான் என் உச்சி மண்டையில..

இந்நிலையில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்டார். இந்த பேட்டியில் இவர் தன்னுடைய இசைப்பயணம் குறித்து பல்வேறு விஷயங்களை மக்களுக்காக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இதில் இவர் இசையமைக்கும் போது ஹிட்டாகும் என்று நினைத்து செய்த பாடல்கள் பெரும் தோல்வியை சந்தித்ததாக கூறியதோடு இந்த பாடல் ஹிட் ஆகுமா? என்று சந்தேகத்தோடு வெளியிட்ட பாடல்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் கிட் அடித்திருக்கிறது.

அந்த வகையில் உத்தமபுத்திரன் படத்தில் இருந்து உசுமலை அரசை பாடல் ஹிட் ஆகும் என்று தான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் அந்த பாடல் தாறுமாறாக ஹிட் அடித்ததை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கும்.

உண்மையை உடைத்த விஜய் ஆண்டனி..

அதுபோலவே நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம் பெற்ற மேரே பியா பாடல் எதற்காக ஹிட் ஆனது என்று இன்று வரை தனக்குத் தெரியவில்லை. ஆனால் அதே சமயம் நான் ஹிட் ஆகும் என நினைத்து ஹிட் ஆகாத ஒரு பாடல் இருக்கிறது. அது என்ன பாடல் தெரியுமா? அதுதான் அ.. ஆ.. இ.. ஈ.. படத்தில் இடம்பெற்ற மேனா மினுக்கி பாடல்.

இந்த பாடல் நான் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் ஆகவில்லை. அதனை அடுத்து கோகல.. அதன் பிறகு அந்த பாடலின் மெட்டிலேயே தான் வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற என் உச்சி மண்டையில சுருங்குது.. என்ற பாடலை உருவாக்கினேன். இந்த பாடல் ஹிட் அடித்து விட்டது என்ற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

இதையும் படிங்க: உள்ள இருக்குறது எல்லாமே பளிச்சுன்னு தெரியுது.. பொதுவெளியில் ஸ்ருதிஹாசன்.. வைரல் பிக்ஸ்..!

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இந்தப் பாடலின் ரீமேக் தான் என் உச்சி மண்டையிலே.. இந்த படத்தில் இடம் பிடித்த மெட்டு என்று தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக மாற்றி இருக்கிறார்கள்.

மேலும் விஜய் ஆண்டனி சொன்ன கருத்தில் எது நன்றாக வரும் என்று நினைக்கிறோமோ? அதை விட எதிர்பார்க்காத ஒன்று மாஸ் வெற்றியைத் தரும். திரையுலகில் இது என்றுமே சகஜமான ஒன்றாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள உதாரணமாக உள்ளது எனக் கூறியிருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam