Money Heist… “பீஸ்ட்” ட்ரெய்லர்.. பொழந்து கட்டும் ரசிகர்கள்..!

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இணையதளத்தில் கிளம்பி உள்ளது இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியான சில மணி நேரங்களிலேயே பல சாதனைகள் படைக்க துவங்கியது.

முதல் ஒரு மணி நேரத்தில் 37 லட்சம் ரசிகர்கள் இந்த முன்னோட்டத்தை பார்க்க சினிமாவின் முந்தைய ரயில் சாதனைகளை இந்தப்படம் முறியடிக்க துவங்கியது. டிரைலரில் உள்ள சில காட்சிகளை வைத்து ரசிகர்கள் அதனை பகுப்பாய்வு செய்யவும் தொடங்கினர்.

ஒரு துணியை விஜய் கிழித்துக்கொண்டு வெளியே வரும் காட்சியில் துணி காவி நிறத்தில் இருக்க இது அரசியல் குறியீடு என பேச தொடங்கினர்.இது ஒருபுறமிருக்க படத்தின் ஒட்டுமொத்த கதையும் ட்ரைலரில் சொல்லப்பட்டது.

ஒரு வணிக வளாகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்து ஒட்டுமொத்த வணிக வளாகத்தை பிடித்துக்கொள்ள அதற்குள் மாட்டிக் கொண்ட பின்னே கைதிகளில் ஒருவராக முன்னால் இந்திய உளவுத்துறை அதிகாரியான விஜய் இருப்பது படத்தின் ஒருவரி என தெரிய வந்தவுடன், இது யோகி பாபு நடிப்பில் வெளியான குர்கா திரைப்படத்தின் கதை என ரசிகர்கள் கிண்டல் செய்யத் தொடங்கினர்.

கூர்கா படத்தில் ஒரு வணிக வளாகத்திற்குள் தீவிரவாதிகள் அனைவரையும் சிறைபிடிக்க அந்த வணிக வளாகத்தில் காவலாளியாக இருக்கும் யோகி பாபு எப்படி அனைவரையும் மீட்டார் என்பது கதை.

இரண்டு படங்களின் கதையும் ஒத்துப் போவதால் இது குறித்து இணையதளத்தில் பேசத் தொடங்கிய ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் யோகிபாபு இருப்பதையும் குறிப்பிட்டு கிண்டல் செய்யத் தொடங்கினர்.

யோகி பாபுவிடம் விஜய் என்ன உன் படத்தின் கதை போல இருக்கா? என கேட்டு உன் கதை தான் என சொல்வது போல ஒரு புகைப்படம் அதிகம் பகிரப்படுகிறது. இதே போல கூர்கா திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை தன்னகத்தே வைத்துள்ள விஜய் தொலைக்காட்சியும் ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களில் கூர்கா படத்தை விளம்பரம் செய்ய தொடங்கியது மறைமுகமாக நெல்சனை கேலி செய்வதாக ரசிகர்களுக்கு நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ட்ரைலர் முழுக்க Money Heist வெப் சீரிஸ் ரீமேக் போல இருக்கு.. என நெட்டிசன்கள் பலரும் கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …