சாமானிய மனிதர் முதல் திரை உலகில் மின்னும் நட்சத்திரங்கள் வரை காதல் என்பது வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படக்கூடிய அனுபவமாக இருக்கும் அந்த வகையில் தளபதி விஜயின் முதல் காதல் ஊத்திக்கொண்ட ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
தளபதி விஜய் திரையுலகில் அன்று யாரை காதலித்தார், அவர் காதல் ஏன் கைக்கூடவில்லை என்பதற்கான விரிவான காரணங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஊத்திக்கொண்ட முதல் காதல்..
தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மிகச்சிறந்த இயக்குனராக இருந்த காரணத்தால் திரை உலகப் பிரவேசத்தை எளிதில் பெற்றுக் கொண்ட தளபதி விஜய் ஆரம்பகட்டத்தில் ஜொலிக்க முடியாமல் பல சருக்கல்களை சந்தித்து இருக்கிறார்.
இதனை அடுத்து விஜயின் அப்பா கேப்டன் விஜயகாந்த் இடம் செந்தூரப்பாண்டி படத்தில் தனது மகனோடு கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டுக் கொண்டதை அடுத்து கேப்டனும் விஜயோடு இணைந்து அந்த படத்தில் நடித்திருந்தார்.
இதனை அடுத்து தளபதி விஜய் நடித்த படங்கள் அனைத்தும் மாஸாக ஓடியது. அது மட்டுமல்லாமல் ஆரம்ப காலத்தில் இவரோடு இணைந்து நடித்த நடிகை சங்கவி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இவர் விஜய் உடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர்கள் நடித்த கோயமுத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தில் படு நெருக்கமாக நடித்திருப்பார்கள்.
அத்தோடு இவர்கள் நடிக்கின்ற படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக ஒர்க் அவுட் ஆனதற்கு காரணமே இருவர் இடையே இருந்த காதல் தான் அந்த அளவு இணைந்து நடிக்க காரணமாக இருந்துள்ளது.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் விஜய் யாரை முதலில் காதலித்தார் என்பது. ஆம் நடிகை சங்கவியை தான் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தார். அவரும் விஜய்யோடு நெருங்கி இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர் இழுத்து இழுப்புக்கெல்லாம் ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்.
அப்பா சொன்ன காரணம்..
இந்த விஷயம் எப்படியோ தளபதி விஜயின் அப்பாவின் காதுகளுக்குச் செல்ல வழக்கமான அப்பாவாக மாறி அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தனது மகனை கண்டித்தும் இருக்கிறார்.
இந்நிலையில் தான் நடிகை சங்கவியோடு கொண்டிருந்த காதலை பிரேக் அப் செய்துவிட்டு சினிமாவில் நடிப்பதில் கவனத்தை செலுத்தினார்.
இதனை அடுத்து தற்போது மனைவியாக இருக்கக்கூடிய சங்கீதா சாதாரண ரசிகையாக பல கடிதங்கள் போட்டு ஒரு கட்டத்தில் நேரில் விஜயை சந்தித்திருக்கிறார். இதனை அடுத்து இவர்கள் இருவருக்குமே பார்த்தவுடன் பிடித்து போய்விட்டது.
மேலும் விஜயின் அம்மா, அப்பாவுக்கும் சங்கீதா பிடித்துப் போக மூன்று ஆண்டுகள் கழித்து தடபுடல் விருந்துடன் ரசிகர்கள் மத்தியில் இவர்கள் திருமணம் நடந்தது.
எப்போதும் தன் மனைவியோடு ஒருமித்த காதலோடு தளபதி விஜய் குடும்பம் நடத்தி வருவது பாராட்டுக்கு உரிய விஷயமாக பிரபல நடிகர் கூறி இருக்கிறார்.
இப்போது உங்களுக்கு மிகத் தெளிவாகப் புரிந்து இருக்கும் தளபதி விஜய் காதலித்த முதல் காதலி சங்கவி. எனினும் தளபதி விஜயின் முதல் காதல் தோல்வியில் முடிந்தது சோகமான ஒன்றுதான்.
ஒருவேளை நடிகை சங்கவியை விஜய் திருமணம் செய்து கொண்டிருந்தால் நடிப்புத் துறையில் எந்த அளவு உச்சத்தை தொட்டிருப்பாரா? என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.