மறுபடியும் மொதல்ல இருந்தா..? இணையத்தில் கசிந்த தளபதி 68 படத்தின் First Look..!

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் தன்னுடைய 68வது படத்தை படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு பெற்றது.

இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் நடிகர் சிம்புவை வைத்து மாநாடு என்ற திரைப்படத்தை கொடுத்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இந்த திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபுவின் படத்தில் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு GOAT என வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சமீப காலமாக இந்த GOAT என்ற சொல் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. Greatest Of All Time என்ற வார்த்தையின் சுருக்கம்தான் இந்த GOAT என்ற சொல்.

இந்த படம் டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருக்கிறது. என்றும் மட்டுமில்லாமல் வேற்று கிரகவாசிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

ஆனால், இது குறித்து அதிகாரப்பூர் தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் கூட இயக்குனர் வெங்கட் பிரபு இது குறித்து பழைய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். நடிகர் விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோ, என்னுடைய படத்திற்கு ஹீரோ என்று கூறினால் என்னுடைய திரைக்கதை வேற லெவலில் இருக்கும்.

உதாரணத்துக்கு திடீரென ஒரு ஏலியன் உலகத்திற்கு வந்து நடிகர் விஜய்க்கு ஏதாவது ஒரு சக்தியை கொடுத்து விட்டு சென்று விடுகிறது என்று யோசித்துப் பாருங்கள்.. ரசிகர்கள் இதில் சந்தேகப்படமாட்டார்கள்..

ஏனென்றால், ஏலியன் என்பது நம்முடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டது.. ஏலியன் இருக்கிறதா..? இல்லையா..? என்ற ஒரு நிலையில் தான் இருக்கிறோம். எனவே ஏலியன் லெவலில் கதை எழுதினால் அது உண்மையா பொய்யா என்று ரசிகர்கள் அலசிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

அதனை அப்படியே கதையாக எடுத்துக் கொள்வார்கள். அப்படி விஜய்யின் கால் சீட் எனக்கு கிடைத்தால் கண்டிப்பாக அந்த கதை ஏலியன் லெவலில் இருக்கும் என்று கூறியிருந்தார். நடிகர் வெங்கட் பிரபுவின் இந்த பேச்சுக்கு ஏற்றார் போலவே தற்போது வெளியாகியுள்ள தகவல்களும் இருப்பதால் மீண்டும் டைம் டிராவல் மற்றும் சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் நடிகர் இயக்குனர் வெங்கட் பிரபு பயணிக்கிறார் என்று தெரிகிறது.

மாநாடு திரைப்படமும் கிட்டத்தட்ட டைம் ட்ராவல் அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம் தான் அதில் அறிவியல் என்ற விஷயத்திற்கு பதிலாக ஆன்மீகத்தை வைத்திருப்பார்கள்.

இந்த படத்தில் அறிவியலை கொண்டு டைம் ட்ராவல் என இருக்கும் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். படம் எப்படி வரப்போகிறது..? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மறுபக்கம் ஏற்கனவே டைம் ட்ராவல் படத்தை கொடுத்து விட்டீர்கள்.. மறுபடியும் முதல்ல இருந்தா..? என்று கலாய்க்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam