சினிமா துறையை பொருத்தவரை சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் எம்ஜிஆர் முதல் கொண்டு ஜெயலலிதா வரை சினிமாவில் கோலோச்சியவர்களே அரசியலில் களம் இறங்கி அபாரமாக திறமையை வெளிக்காட்டி மக்கள் பணி செய்தார்கள்.
இந்த வரிசையில் தற்போது கமலஹாசன் கூட தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டது அனைவரும் அறிந்ததே. எனினும் ரஜினிகாந்த் மட்டும் தான் வருவேன், எப்ப வருவேன் என்று தெரியாது. ஆனால் அந்த சமயத்திற்கு வருவேன் என்று டயலாக் பேசி ரசிகர்களின் மனதில் ஆசையை கிளப்பி விட்டு இன்று வரை அதற்கு பதில் தராமல் இருக்கிறார்.
மேலும் தனது உடல் நிலையை சுட்டிக் காட்டி அரசியலில் ஈடுபடுவதற்கு உகந்த நேரம் இது அல்ல என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
அடுத்து எல்லோரும் தல அஜித் அரசியலுக்கு வந்தால் மிக நன்றாக இருக்கும் என்று எண்ணிய வேளையில் அவர் வெளிப்படையாக தனக்கும் அதற்கும் சம்பந்தமே கிடையாது. எனவே தனை எதிர்பார்க்க வேண்டாம் என்று அழகாக விலகிவிட்டார்.
அடுத்து நிச்சயமாக விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணத்தில் தற்போது அவரது ரசிகர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஊராட்சி, நகராட்சி தேர்தலில் இவரது பெயரைப் பயன்படுத்தி போஸ்டர்களை அடித்து அதில் வெற்றியும் அடைந்தார்கள்.
அரசியலில் இறங்க மாட்டேன் என்று இதுவரை எந்த ஒரு வாக்குறுதியும் நடிகர் விஜய் தெரிவிக்கவில்லை. இவரது படங்கள் மற்றும் விழாக்களில் அரசியல் குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது வரத்தான் செய்கிறது.
மேலும் பாஜக கட்சியானது இவர் மீது கூறும் விமர்சனம், பணமதிப்பிழப்பு குறித்து விஜய்யின் கண்டனம், நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் வீட்டுக்கு விஜய் சென்றது, ஜல்லிக்கட்டில் பங்கேற்றது, சூட்டிங்கில் வருமான வரி சோதனை என அடுக்கடுக்காக நிகழ்வுகள் மூலம் இவர் அரசியலில் நுழைய பிள்ளையார் சுழி போட்டு விட்டார் என ரசிகர்கள் கருதி வருகிறார்கள்.
தற்போது விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்க தலைவர் புஜ்ஜி ஆனந்தை சந்தித்து இருக்கிறார்கள். அப்போது ரசிகர்கள் அங்கு கோஷமிட்ட வீடியோ ஒன்று தற்போது மிக வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் வருங்கால துணை முதல்வர் என்று அவரை அழைத்து வாழ்க என்று கோஷம் இடுகிறார்கள். அடுத்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் போட்டு விடலாம் என்று தெரிகிறது.