நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 170வது படம். இந்த படத்தை இயக்குநர் தசெ ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் ரஜினிக்கு மகனாக பகத்பாசில் நடிக்கிறார். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதன் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ துவங்க இருக்கிறது. இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இதற்கிடையே இன்று ஒரு மகிழ்ச்சிக்கரமான ஆனால், சற்று வித்யாசமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. மாரி செல்வராஜ் சொன்ன கதையை கேட்டு ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.
ஜெயிலர் 2க்கு முன்னதாகவே இந்த படத்தை பண்ணி விடுவோம் என்றும் ரஜினி, மாரி செல்வராஜிடம் உறுதிமொழி தந்திருக்கிறார். இந்த படத்தை முதலில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு நிறுவனமா ரெட் ஜெயின்ட் மூவிஸ்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் படத்துக்கு தேவையற்ற அரசியல் சாயம் பூசப்பட்டு விடும் என்று ரஜினி கருதியதால், இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமாரும், நடிகர் விஜயும் குளோஸ் பிரண்ட்ஸ். இருவரும் பிஸினஸ் பார்ட்டனர்கள். அதனால், இந்த தயாரிப்பு நிறுவனத்தில் விஜய்க்கும் நிறைய பங்கு உண்டு. அந்த வகையில் இந்த ரஜினி 171 படத்தை தயாரிக்கப் போவதே விஜய்தான் என்ற தகவலும் இப்போது வெளிவந்துள்ளது.