கேரவேனுக்குள் பிரபல நடிகரை கட்டாயப்படுத்தி கூப்பிட்ட ஜோதிகா.. ஓப்பனாக கூறிய விஜய்..!

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷ நடிகைகளில் ஒருவராக ஜோதிகாவை தாராளமாக சொல்லலாம். ஏனெனில் அவர் நடித்த படங்களில் எல்லாம் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை அவர் நிரூபித்து இருக்கிறார்.

ஜோதிகா

தமிழ் சினிமாவில் முதலில் டைரக்டர் வசந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்தார் ஜோதிகா. அதில்தான் அவர் நடிகையாக அறிமுகமானார்.

ஆனால், அதற்கு பின்பு இயக்குநர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜீத்குமாருடன் நடித்த வாலி படம், முதலில் ரிலீஸ் ஆகி விட்டது.

அதனால், எனக்கு ரீல் லைப்பில் முதல் ஹீரோ அஜீத்குமார், ரியல் லைப்பில் ஹீரோ சூர்யா என்று விளையாட்டாக கூறுவது ஜோதிகாவின் வழக்கம்.

 

ஆனால் வாலி படத்தில் கேமியோ ரோலில் வந்தாலும் அசத்தியிருப்பார் ஜோதிகா. அதே போல் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் பூவே பூவே பாடலில் பிரமாதமாக நடனமாடி அசத்தியிருப்பார்.

தொடர்ந்து குஷி, சிநேகிதியே, டும்டும்டும், தூள், பிரியமான தோழி, காக்க காக்க, மன்மதன், சந்திரமுகி, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறினார்.

சூரியாவுடன் திருமணம்

அதன்பிறகு நடிகர் சூரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில் சூரியா – ஜோதிகா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இப்போது மும்பையில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டனர்.

திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் முன்பை விட அதிக ஆர்வமாக இருக்கிறார் ஜோதிகா. சமீபத்தில் நடிகர் மம்முட்டியுடன் அவர் நடித்த காதல் தி கோர் மலையாள படம் பெரிய வரவேற்பை, கவனிப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து மூத்த நடிகர் தலைவாசல் விஜய் நேர்காணல் ஒன்றில் ஜோதிகா குறித்து பேசியிருக்கிறார்.

கடுமையான முதுகுவலி

ஒரு படத்தில் நடித்த போது, ஷூட்டிங் நேரத்தில் எனக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. அப்போது ஒரு சேரில் சாய்ந்து அமர்ந்து இருந்தேன்.

அப்போது அங்கு வந்த ஜோதிகா, என்னிடம் விசாரித்து விட்டு கேரவனில் வந்து படுத்துக்குங்க என்று அழைத்தார்.

கேரவனுக்குள்…

நான் வேண்டாம் என்று பலமுறை மறுத்தும், என்னை கட்டாயப்படுத்தி கேரவனுக்குள் ரெஸ்ட் எடுத்துக்கச் சொன்னார். சக மனிதர்களிடம் அவ்வளவு அக்கறையாக நடந்துக்கொள்பவர் ஜோதிகா.

உண்மையில் ஒரு தங்கச்சி போல அந்த நேரத்தில் ஜோதிகா என்னிடம் நடந்துக்கொண்டார் என்று கூறியிருக்கிறார் நடிகர் தலைவாசல் விஜய்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version