“விஜய் தப்பா புரிஞ்சிக்கிட்டு அப்படி கேட்டார்..” மிரண்டு போயிட்டேன்..! வெளிப்படையாக பேசிய கீர்த்தி சுரேஷ்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இடையில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். பைரவா திரைப்படத்திலும் சர்க்கார் திரைப்படத்திலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் இடம் நான் ஒன்று சொல்ல போய்.. அதை அவர் தவறாக புரிந்து கொண்டு கேட்ட கேள்வியில் மிரண்டு போயிட்டேன் என்று கூறியுள்ள தகவலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் இருவரும் காதலிக்கிறார்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கூட இணைய பக்கங்களில் தகவல்கள் உலா வந்தன.

ஆனால் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கின்றனர் விஜயும் கீர்த்தி சுரேஷும். நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படத்தின் வேலையில் மும்முரமாக இருக்கிறார். மறுபக்கம் தீவிரமான அரசியல் பிரவேசத்திற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது பைரவா படப்பிடிப்பு தளத்தில் நான் விஜய் சாரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, போக்கிரி படம் வெளியான போது நாங்கள் எப்படி கொண்டாடினோம் என்று என்னுடைய அழகான நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.

போக்கிரி படம் வெளியாகும் போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதிலிருந்தே நான் விஜயின் தீவிர ரசிகை. இதை நான் விஜய் இடம் கூறிக் கொண்டிருந்த பொழுது ஒரு நிமிடம் என்னை பார்த்த விஜய்.. ஹே நிறுத்து.. இப்போது எதற்கு உன்னுடைய ஸ்கூல் கதையெல்லாம் என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்க..? என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.

அவர் என்ன புரிந்து கொண்டார் என்றால்… நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே நீங்கள் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தீர்கள்.. என்று கூறியதன் மூலம் அவருக்கு வயதாகி விட்டது என்பதை மறைமுகமாக கலாய்க்கிறேனோ…? என்று அவர் நினைத்துக் கொண்டார்.

ஆனால்.. சார்.. நான் அப்படி நினைத்து சொல்லவில்லை. என்னுடைய பள்ளிக்கால அனுபவங்களை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். உங்களிடம் சொல்ல வேண்டும் என்ற தோன்றியது.. அதனால் தான் சொன்னேன்.. என்று பதில் கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version