கேரளாவில் விஜய்.. நொறுங்கிய கார்.. தீயாய் பரவும் வீடியோ..

நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் இருக்கும் மாஸ் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர் எங்கு சென்றாலும் ரசிகர் கூட்டம் திருவிழா போல கூடிவிடும்.

அதனால் பொது இடங்களுக்கு விஜயை அழைத்து வருவது எங்களுக்கு பிரச்னை அல்ல, அவர் அழைத்தால் வந்து விடுவார்.

ஆனால் அவரை ரசிகர் கூட்டத்தில் பாதுகாத்து திருப்பி அனுப்பி வைப்பது எங்களுக்கு மிகவும் கஷ்டம் என்று சமீபத்தில் அவரது முந்தைய விஜய் மக்கள் இயக்க தலைவரும், இப்போதைய தமிழக மக்கள் வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளருமான புஸ்லி ஆனந்த் ஏற்கனவே கூறியிருந்தார்.

விஜய்

அது உண்மைதான். ஏனெனில் பொது இடங்களில் விஜய்க்கு கிடைக்கும் ஆரவாரமும் வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதே நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைவின் போது அத்தனை கூட்டத்தில் தனது பாதுகாப்பை பொருட்படுத்தாமல் நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது விஜய் மீதான அபிமானத்தை அதிகரித்தது.

விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா சென்றாலும் இதே வரவேற்பை, ரசிகர்கள் ஆரவாரத்தை காண முடிகிறது. அதற்கு காரணம் அந்த மொழிகளிலும் விஜய் படம் வெளியாகி, வெற்றி பெறுகின்றன.

இதையும் படியுங்கள்: கக்கூஸ் போற இடத்துல செய்ற வேலையா இது..? பிக்பாஸ் கேப்ரில்லாவை விளாசும் ரசிகர்கள்..!

முழுநேர அரசியல்வாதியாக

இப்போது விஜய், வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 68வது படம். இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரே ஒரு படத்தில் அதாவது 69வது படத்தில் நடிக்க உள்ளார். அதன்பிறகு சினிமாவை விட்டு விலகி, முழுநேர அரசியல்வாதியாக தனது தமிழக வெற்றிக் கழகத்தில் பணிகளில் ஈடுபடுகிறார்.

2026ம் ஆண்டில் வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் விஜய், சமீபத்தில் தனது கட்சியில் உறுப்பினராக சேர செயலி அறிமுகப்படுத்தினார். சில தினங்களில் 50 லட்சம் இந்த செயலி மூலம் உறுப்பினர்களாக விஜய் கட்சியில் இணைந்துள்ளனர்.

கட்சியின் கொள்கை, கோட்பாடுகள்

இது மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இன்னும் விஜய் தனது கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் எதையுமே அறிவிக்காத நிலையில் மக்கள் அவர் மீதான அபிமானத்தை இது வெளிப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

கேரளாவில்

இந்நிலையில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடக்கிறது. இதற்காக விமானத்தில் கேரளா சென்றார் விஜய். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் காத்திருந்த பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தில் விஜயை பார்த்ததும் ஆரவார கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

அலைமோதிய ரசிகர் கூட்டம்

விஜய் காரில் ஏறி நின்றபடி அவரை பார்த்து கையசைத்து, தனது சந்தோஷத்தை காட்டினார். அப்போது காருக்குள் அமர்ந்திருந்த விஜயை பார்க்க தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

விஜயை பார்க்க கேரளாவில் திரண்ட ரசிகர் கூட்டம் குறித்த வீடியோ, அவர் காரில் ஏறிச் சென்ற காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version