உண்மையான வளர்ச்சி இது தான்.. உழைப்பாளர் தினத்தில் நடிகர் விஜய் செய்த செயல்..!

ஆண்டுதோறும் சர்வதேச தொழிலாளர்கள் தினம் மே 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பை நினைவுப்படுத்தி அவர்களை பாராட்டும் விதத்தில் இந்த மே தின நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல் உழைப்பாளர் தினம்:

1923 ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் திருவான்மியூர் பகுதியில் முதன் முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த தினத்தன்று பொதுவுடமைவாதியும் தலைச்சிறந்த சீர்திருத்த வாதியும் ஆன சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில் இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் அப்போதே கொண்டாடப்பட்டது.

திருவான்மியூர் கூட்டத்தில் சுப்பிரமணிய சிவா மற்றும் எம் பி எஸ் வேலாயுதம் தலைமையில் இந்தியாவின் முதல் மேதினம் கொண்டாடப்பட்டது. அன்று முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.

சென்னை மெரினா கடற்கரையில் மே தின நினைவுச் சின்னங்கள். உலக மக்களை கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உழைப்பளர்களை பறைசாற்றும் மே தினம்:

இந்நிலையில் நேற்று கொண்டாடப்பட்ட இந்த மே தினத்தில் பல்வேறு திரைநட்சத்திரங்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில். நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

“உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு பறை சாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ‛‛மே தின” நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

உண்மையான வளர்ச்சி இது தான்:

அத்துடன் அந்த பதிவில், புகைப்படம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் உழைப்பாளர்களை குறிக்கும் வகையிலான போட்டோ மற்றும், விஜய்யின் போட்டோ இடம்பெற்றுள்ளது.

“மே 1ஆம் தேதி” என்பதை பெரிய கொட்டை எழுத்தில் உள்ளது. அதோடு, உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை மனத்தில் கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய்யின் இந்த பதிவினை தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் ரீ போஸ்ட் செய்தும் ஷேர் செய்தும் ட்ரென்ட் ஆகியுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் தீவிர அரசியல் களம்:

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது டாப் அந்தஸ்தில் இடத்தை பிடித்திருக்கிறார்.

இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதனிடையே அவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

தமிழக வெற்றிக்கழகம் என கட்சித் துவங்கி அதன் மூலம் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து விரைவில் தேர்தலில் இறங்கி சாதிக்கவும் காத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியான நேரத்தில் விஜய் இதுபோன்ற சமூக நலம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டு வருவது மக்களின் கவனத்தையும் அரசியல்வாதிகளின் மீதான கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version