தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நாயகனாய் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு கூற வேண்டாம்.
தன் தந்தையின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகர் விஜய் படிப்படியாக சினிமா துறையில் முன்னேறி இன்று தியேட்டர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார்.
நடிகர் விஜய்..
அட.. அது என்ன தியேட்டர் ஸ்டார் என்று நீங்கள் நீ யோசிக்கலாம். இவரது திரைப்படங்களை ரசிகர்கள் அதிகளவு தியேட்டர்களில் சென்று பார்ப்பதால் தியேட்டர்களுக்கு உரிய வருவாயை கொடுக்கக்கூடிய முக்கிய நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய் திகழ்கிறார்.
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் விரைவில் அரசியல் பிரவேசம் செய்ய இருப்பதால் இவரை நம்பி இருக்கும் தியேட்டர்களுக்கு ஒரு மிகப்பெரிய அடி வசூலில் ஏற்படும் எனக் கூறலாம்.
இது பற்றி பல பிரபலங்கள் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்கள். விஜய் திரைத்துறையை விட்டு விலகி அரசியலுக்குள் போகும் போது அது திரைத்துறைக்கு ஒரு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.
குடியால் பறிபோன வாய்ப்பு..
அந்த வகையில் நடிகர் விஜயை வைத்து திரைப்படம் செய்ய வேண்டும் என்று பல இயக்குனர்கள் கனவாக இன்று கைகளில் கதைகளோடு அலைந்து வரக்கூடிய காலத்தில் விஜயிடம் கதையைக் கூறி படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பை பெற்ற இயக்குனர் ஒருவர் குடியால் வாய்ப்பினை இழந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் குடி குடியை கெடுக்கும் என்ற வாசகத்துக்கு ஏற்ப இவர் குடியால் தளபதி விஜய் இயக்கும் வாய்ப்பை இழந்திருப்பது உண்மை தான். அந்த இயக்குனர் மிகவும் திறமைசாலி ஏற்கனவே முரளி மற்றும் சுபலட்சுமி நடிப்பில் வெளி வந்த தினந்தோறும் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் நாகராஜன் தான் குடியால் வாய்ப்பை இழந்த இயக்குனர்.
இவர் இயக்குனராக இருந்ததோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடிகராக நடித்திருக்கிறார். மேலும் குடிக்கு அடிமையாக இருந்த காரணத்தால் பல நல்ல வாய்ப்புகளை இவர் தவற விட்டு விட்டார்.
அந்த வகையில் இவர் எஸ் ஏ சந்திரசேகர் அவரிடம் சொன்ன கதையால் ஈர்க்கப்பட்டு விஜயின் கால்ஷீட் இவருக்கு கொடுத்திருக்கிறார். மறுநாள் விஜயை பார்க்க இயக்குனர் நாகராஜன் செல்லும் போது ஃபுல் போதையில் சென்றிருக்கிறார்.
இப்ப புலம்பி என்ன யூஸ்..
இந்நிலையில் ஃபுல் போதையில் சென்ற அவரைப் பார்த்து சார் என்ன இதெல்லாம் என்று கேட்க அதற்கு இயக்குனர் நாகராஜன் இதுல என்ன தப்பு வேலையில நான் கரெக்டா இருப்பேன் என்று பதிலளித்திருக்கிறார்.
எனினும் இதனை விஜய் தரப்பு ஏற்க மறுத்த காரணத்தால் இயக்குனர் நாகராஜனுக்கு விஜயை இயக்கக்கூடிய வாய்ப்பு பறிபோனது.
இனி அந்த வாய்ப்பு பறிபோனதை நினைத்து புலம்பி என்ன பிரயோஜனம் குடியால் அனைத்தும் இழந்தது தான் மிச்சம் என்று கூறக்கூடிய வகையில் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
மேலும் விஜய் அழைத்து படம் கொடுத்த சூழ்நிலையில் படுபாவி பய குடிச்சுட்டு போய் வாய்ப்பைக் கோட்டை விட்டேன் என புலம்பி அழும் இயக்குனராக நாகராஜன் இருக்கிறார்.
வழிய வந்த ஸ்ரீதேவியை குடியால் விரட்டிய நாகராஜன் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு குடியினால் எவ்வளவு பெரிய தீமை ஏற்பட்டு ஒருவரது வாழ்வு சீரழியும் என்பதையும் எடுத்து உரைக்கக் கூடிய வகையில் உள்ளது.