எங்க வீட்டுல இதுதான் பழக்கம்… சாப்பிட வந்த மோகன்லாலிடம் விஜய் சொன்ன விஷயம்!.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் எப்படி விஜய் மிக முக்கியமான நடிகராக இருக்கிறாரோ அதேபோல மலையாள சினிமாவில் அதிக பிரபலமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார்.

சொல்ல போனால் இங்கு எப்படி ரஜினி கமல் இருக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் மோகன் லாலும், மம்முட்டியும் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் மோகன்லால் வெகு நாட்களாக தமிழிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிகர் மோகன்லால்

தமிழில் நிறைய திரைப்படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார் என்பதால் தமிழ் மக்கள் மத்தியில் அடையாளம் காணப்படும் ஒரு நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். மோகன்லால் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

அவர் நடித்த திரைப்படங்களில் இருவர், சிறைச்சாலை போன்ற திரைப்படங்கள் மிக முக்கியமான படங்களாகும். மோகன்லால் ஒரு தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அதனாலேயே அவருக்கு நல்ல நடிப்பு இருக்கும் படங்களில்தான் பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

Mohanlal Viswanathan Nair

எங்க வீட்டுல இதுதான் பழக்கம்

மலையாளத்தில் கூட ஆக்ஷன் படங்களில் ஓரளவு நடித்து இருக்கிறார் மோகன்லால். ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைகளங்களை கொண்டிருக்கும்.

சிறைச்சாலை திரைப்படத்தை பொறுத்தவரை அது சுதந்திர இந்தியா காலகட்டத்தில் சிறையில் மாட்டிக் கொண்ட ஒருவரின் கதையாக இருக்கும். அதேபோல இருவர் திரைப்படமும் எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞரின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் கதையாக எடுக்கப்பட்டிருந்தது.

மோகன்லாலிடம் விஜய் சொன்ன விஷயம்

அதில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில்தான் மோகன்லால் நடித்திருந்தார் மோகன்லால். கமர்சியலான ஒரு கதாபாத்திரமாக தமிழில் நடித்த திரைப்படம் ஜில்லா திரைப்படம்தான். ஜில்லா திரைப்படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்திருந்தார் மோகன்லால்.

இந்த நிலையில் பட குழுவை அழைத்து ஒரு நாள் விருந்து வைத்தார் விஜய். அன்றைக்கு மோகன்லால் மற்றும் அவரது நண்பர்கள் சிலரும் விருந்துக்கு வந்திருந்தனர். அப்படி விருந்துக்கு வந்தவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறனார் விஜய்.

ஆனால் அவர்களுடன் அமர்ந்து விஜய் சாப்பிடவே இல்லை மோகன்லால் எவ்வளவோ வற்புறுத்தியும் விஜய் சாப்பிடவில்லை. இது கூட இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு சீனியர் நடிகர் சாப்பிடும்படி வற்புறுத்தியும் கூட விஜய் சாப்பிட மாட்டேன் என்கிறாரே என்று கூட இருந்தவர்கள் கோபப்பட்டனர்.

இந்த நிலையில் விஜய் மறுநாள் படப்பிடிப்புக்கு வந்த போது இது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த விஜய் சிறுவயதிலிருந்தே எனது அப்பா யாராவது விருந்தாளிகள் வந்தால் அவர்களுக்கு சாப்பாடு போட்டு அவர்கள் சாப்பிட்ட பிறகுதான் சாப்பிட வேண்டும் என்று கூறிவிட்டார். எனக்கு அதுவே பழக்கம் ஆகிவிட்டது என்று கூறி அதற்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version