தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாடு எங்கு தெரியுமா..?  வெளியான பரபரப்பு தகவல்கள்..!

விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தது முதலே அரசியல் களம் சூடு பிடித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். பொதுவாக பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு என்பது பலரும் அறிந்த விஷயம்தான்

அரசியல்வாதிகளை கூட மக்கள் அனைவருக்கும் தெரியாது ஆனால் பிரபலங்களை தமிழ்நாட்டை சேர்ந்த அனைவருக்கும் தெரியும் என்பதால் அவர்கள் மிக எளிதாகவே அரசியலில் வரவேற்பை பெற்று விடமுடியும். இந்த ஒரு காரணத்தினால்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் எனும்போது அது சில அரசியல்வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும்.

அரசியல் எண்ட்ரி:

இந்த நிலையில் 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் அதிகமான வரவேற்பு பெற்ற நடிகராக இருந்து வருபவர் விஜய். விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று பல காலங்களாக சொல்லி வந்தாலும் ரஜினிகாந்த் மாதிரியே இவரும் கட்சி எதுவும் ஆரம்பிக்க மாட்டார் என்ற பலரும் நினைத்து வந்த நிலையில் இந்த வருடத்தின் துவக்கத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய்.

அதனை தொடர்ந்து கட்சி வேலைகளை தாமதமாகதான் அவர் துவங்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. அதேபோலவே தற்சமயம் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வரும் விஜய் கோட் திரைப்படத்தின் படபிடிப்பு முடிந்த பிறகு அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை செய்யப் போகிறார் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக அவரின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடி என்னவென்பதை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவையெல்லாம் இனிதான் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிறைய மக்களுடன் கலந்துரையாட விஜய் ஒரு பெரும் திட்டம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் திட்டம்:

அதன் ஒரு முன்னெடுப்பாக முதலில் மாநாடு ஒன்று நடத்த வேண்டும் என்பது விஜய்யின் திட்டமாக இருக்கிறது. அரசியல் தலைவர்களுக்கு ஒரு பெரும் அடையாளமாக இருப்பது மாநாடுதான். ஒரு மாநாட்டை அவர்கள் எவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள்? அதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறதா? என்பதை வைத்து பலரும் அவர்களது அரசியல் திறனை முடிவு செய்வார்கள்.

விஜய்யை பொறுத்தவரை அரசியல் சார்ந்து எந்த ஒரு விஷயமும் இதுவரை செய்ததில்லை. இதனை தொடர்ந்து அவர் நடத்த போகும் முதல் மாநாடுதான் விஜய்க்கு முக்கியமான விஷயமாக இருக்கப்போகிறது. இந்த நிலையில் இந்த மாநாட்டை எங்கு நடத்த போகிறார் என்பது பலருக்கும் பேச்சாக இருந்து வந்தது.

இந்த நிலையில் விஜய் திருச்சியில் இந்த மாநாட்டை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தமிழ்நாட்டின் மைய மாவட்டமாக திருச்சி தான் பார்க்கப்படுகிறது. எனவே திருச்சியில் ஒரு பெரும் மாநாட்டை நிகழ்த்த முடிவு எடுத்திருக்கிறாராம் விஜய்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam