நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் இரண்டு மாதங்களில் இதன் படப்பிடிப்பு முடிக்கப்படுகிறது.
இதையடுத்து விஜய் 69 படத்துக்கான அறிவிப்புகள் எதுவும் இதுவரை விஜய் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
இதுதான் விஜய் நடிக்கிற தற்காலிகமான கடைசி படம். இனி அரசியல் பணிகளில் தீவிரமாகி விடுவார்.
அரசியலில் முக்கிய இடத்துக்கு வந்த பிறகுதான், அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சினிமா பத்திரிகையாளர்கள் கூறி வந்தனர்.
அதை நிரூபிக்கும் விதமாக, இதுவரை தனது விஜய் 69 படம் குறித்த எந்த தகவலையும் விஜய் தரப்பில் இருந்து உறுதியாக வெளியாகவில்லை.
ஆனால் விஜய் அரசியலில் இறங்குவது அவரது மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அரசியலில் இறங்கி, வீணாக்கி விட வேண்டாம் என்றும் அவர் கூறியிருக்கின்றனர்.
எனினும் விஜய் தனது ரசிகர் படை பலத்தை நம்பி அரசியல் இறங்குகிறார். மத்தியில் உள்ள தேசிய கட்சிகளும் சில அவருக்கு ஆதரவு தருவதாக கூறப்படுகிறது.
நேற்று திடீரென தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து விஜய் திடீர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். கட்சி துவங்கும் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்க இருக்கிறார் என்ற தகவல்கள் கடந்த ஒரு வார காலமாக வைரலாகி கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் பெயர் தொடங்கும் நாள் முதல் மாநாடு நடக்கும் இடம் என்ற சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன
அந்த வகையில் தன்னுடைய கட்சிக்கு ‘மக்கள் கட்சி’ என்று இரண்டே வார்த்தையில் பெயர் வைத்திருக்கிறார் நடிகர் விஜய் என்று கூறப்படுகிறது
மேலும் மதுரையில் முதல் மாநாட்டை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் வருகிற தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 அன்று கட்சியின் பெயர் மற்றும் கொடியை அதிகாரப்பூர்வமாக மதுரை மாநாட்டில் அறிவிக்கிறார் நடிகர் விஜய்.
இந்த தகவல்கள் நடிகர் விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கிடைத்திருக்கின்றன
ஆனால் இதுகுறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விஜய் தரப்பில் இருந்து வெளியாக நிலையில், தற்போதைய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொள்ள துவங்கி விட்டது.