தமிழக அரசியலைப் பொறுத்த வரை திரைப்படங்களில் நடித்தவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று நாம் கூறலாம். அந்த வரிசையில் தற்போது தமிழக வெற்றி கழகம் மூலமாக அரசியலில் களம் இறங்கப் போகும் தளபதி விஜய், திரை உலகிற்கே மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட போவதாகவும் இது தியேட்டர்களை அதிகளவு பாதித்து ஒரு பெருத்த நஷ்டத்தை தியேட்டர்களுக்கு உருவாக்கம் என்ற உண்மையான தகவலை கூறி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார் ரங்கராஜ் பாண்டே.
ஏற்கனவே பல அரசியல் சார்ந்த விஷயங்களை மிகச்சிறப்பாக அலசி ஆராய்ந்து தீர்வு சொல்லக்கூடிய இவரின் இந்த கணிப்பு இந்த விஷயத்தில் பொய்யாகாது என்று பலரும் நம்புகிறார்கள்.
விஜய் அரசியல்..
நடிகர் எம்ஜிஆர், நடிகை ஜெயலலிதா போன்றவர்கள் ஒரு காலத்தில் திரையில் ஜொலித்த பிறகு மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து அதற்கு தகுந்தவாறு தங்களது திரைப்படங்களில் கொள்கைகளை மக்கள் மத்தியில் உரைத்து தமிழகத்தில் சிஎம் ஆக திகழ்ந்தார்கள்.
அந்த வரிசையில் நடிகர் சீமான் முதல் கொண்டு உலக நாயகன் கமலஹாசன் வரை கட்சிகளை ஆரம்பித்து கவர்ச்சிமிகு கொள்கைகளைப் பேசி அரசியலில் ஈடுபட்டு வரக்கூடிய வேளையில் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தளபதி விஜய் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து அரசியலில் இறங்கிவிட்டார்.
இவரும் அண்மை காலமாக இவர் நடித்த படங்களில் அரசியலுக்கு வருவதை வெளிப்படையாகவே உணர்த்தக்கூடிய வகையில் வசனங்களையும், பாடல்களையும் அமைத்து மக்களை தன் பக்கம் ஈர்த்தவர்.
மேலும் தனது ரசிகர் மன்றத்தை, மக்கள் நலன் செய்யும் மக்கள் மன்றமாக மாற்றியதை அடுத்து தற்போது அரசியலில் ஈடுபட இருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் இந்த அரசியல் பிரவேசம் இன்றல்ல கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிடப்பட்டு காய்கள் நகர்த்தப்பட்டு தற்போது கட்சியாக உயிர் பெற்றுள்ளது.
தியேட்டர்களுக்கு நஷ்டம்..
இவர் கட்சியின் பெயரை டி- கோடிங் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ரங்கராஜ் பாண்டே. விஜய் திரையுலகை விட்டு வெளியேறினால் கண்டிப்பாக தியேட்டர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதை புள்ளி விவரத்தோடு தெரிவித்திருக்கிறார்.
இவருக்கு சம்பளமாக வெறும் 50 கோடி கிடைக்கிறது என்றால் இரண்டு வருடத்தில் நான்கு படங்களில் நடித்து 200 கோடி சம்பாதித்து விடுவார், இந்த சம்பாத்தியம் அவருக்கு போதுமானது தான். இந்த 200 கோடியை வைத்து உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன தீர்ந்தா போகும்.
மேலும் தான் சம்பாதிக்கக்கூடிய அந்த 200 கோடியை வேண்டாம் என்று விட்டு விட்டு மக்கள் சேவைக்காக வந்திருப்பதால் சினிமா இண்டஸ்ட்ரிக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவர் மட்டும படங்களில் நடித்திருந்தால் 200 கோடி ரூபாய்க்கு மேல் திரை உலகுக்கு கிடைத்திருக்கும். அது மட்டுமல்லாமல் திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் இருக்கும் தியேட்டர்களில் இவர் படம் கட்டாயமாக ஓடும்.
ஏற்கனவே ஓடிடி பிரச்சனையால் திரைப்படங்கள் அதிக அளவு திரையரங்குகளில் ஓடுவது இல்லை என்ற மிகப் பெரிய அவல நிலையை சந்தித்து வரக்கூடிய தியேட்டர்களில் அதிகளவு விஜய் போன்ற பெரிய ஸ்டார்களின் படம் ஓடினால் மட்டுமே பணத்தை பார்க்க முடியும்.
விஜய் ஒரு தியேட்டர் ஸ்டார் என்பதால் தியேட்டர் முன் வந்து அவர் பேசக்கூடிய வசனங்களை ரசிப்பதற்காகவே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுப்பார்கள். அதுவே இரண்டு படம் என்றாலும் இரண்டு வருடங்களில் 4 படங்கள் மிஸ் ஆகப்போகிறது.
எனவேதான் நான் கூறுகிறேன் இது ஒரு மிகப்பெரிய இழப்பு தியேட்டர்களுக்கு என்பதோடு மட்டுமல்லாமல் திரை உலகிற்கும் ஒரு மிகப்பெரிய ஈடு செய்யாத இழப்பாக இருக்கும். இந்த நிலையானது 2026க்குள் இவர் அரசியலுக்குள் முழுமையாக ஈடுபடுவாரா? இல்லையா? என்பது விரிவாக தெரிந்துவிடும் என்று அண்மை பேட்டியில் ரங்கராஜ் பாண்டே பேசி இருக்கிறார்.