இந்த பாட்டுல அது எல்லாமே பொய்.. இயக்குனர் கூறிய தகவலை கேட்டு வியப்பில் ரசிகர்கள்..!

காதலுக்கு மரியாதை என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை பிறகு விஜய் நடிப்பில், 1998ம் ஆண்டில் வெளியான படம் நினைத்தேன் வந்தாய். இந்த படத்தை டைரக்டர் செல்வபாரதி இயக்கி இருந்தார்.

விஜய்

விஜய், தேவயானி, ரம்பா, வினுசக்ரவர்த்தி, மணிவண்ணன், ஆர் சுந்தர்ராஜன், செந்தில், சார்லி, மலேசியா வாசுதேவன், அல்வா வாசு, ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தார்.

இசையமைப்பாளர் தேவா இசையில் இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே சிறப்பாக இருந்தன. குறிப்பாக மல்லிகை மல்லிகையே, வண்ண நிலவே, வண்ண நிலவே வருவது நீதானா போன்ற பாடல்கள் செம ஹிட் ஆகின.

தனது கனவில் வரும் பெண்ணை காதலிக்கிறார் நடிகர் விஜய். வயிற்றில் தொப்புள் பகுதியில் இருக்கும் மச்சம் மட்டும்தான் அந்த பெண்ணின் அடையாளம். ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் விஜய், அங்கு ரம்பாவை சந்திக்கிறார்.

ரம்பா

தனது கனவில் வந்த காதல் நாயகி ரம்பா தான் என தெரிந்துக்கொண்டு அவரை சின்சியராக காதலிக்கிறார். ஆனால் வீட்டில் அப்பா வினுச்சக்கரவர்த்தி, கட்டாயத்தால் திருமணம் செய்ய பெண் பார்க்க செல்கிறார். அங்கு தேவயானியை சந்திக்கிறார்.

ஒரு கட்டத்தில் ரம்பாவும், தேவயானியும் சகோதரிகள் என தெரிய வருகிறது. ஆனால் அது விஜய்க்கு தெரியாது.

தனது அக்கா விஜய் மீது கொண்ட காதலை புரிந்துக்கொண்ட ரம்பா, விஜயை விட்டு பிரிய முடிவெடுக்கிறார். கிளைமேக்ஸில் விஜய் ரம்பாவை திருமணம் செய்தாரா, தேவயானியை திருமணம் செய்தாரா என்பதுதான் கதை.

வண்ண நிலவே வண்ண நிலவே

இந்த படத்தில் இடம்பெற்ற வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா என்ற பாடல் காட்சியில், விஜய்க்கு கனவில் வரும். அப்போது அந்த பாடலில் ரம்பாவின் முகத்தை காட்டாமல் உடலை, மட்டுமே காட்டுவார்கள்.

அந்த படத்தை டைரக்ட் செய்த போது, டைரக்டர் செல்வபாரதிக்கும், நடிகை ரம்பாவுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதனால் ரம்பா படத்தை முடித்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால் கடைசியில் ஒரு பாடல் காட்சியில் ரம்பா நடிக்க வேண்டி இருந்துள்ளது.

அந்த பாடல் குறித்த உண்மையை. அந்த படத்தின் இயக்குநர் செல்வபாரதி ஒரு நேர்காணலில் கூறியதாவது.

பாதி பாட்டு பெண்டிங்

வண்ணநிலவே பாட்டு மட்டும் தான் எடுத்திருக்கோம். பாதி பாட்டு பெண்டிங் இருக்கு. ரம்பா ஷாட் எல்லாம் எடுக்கலை. யோசிச்சேன். திரும்ப அவங்களை கூப்பிட்டு வெச்சு எடுக்கணுமா? இப்ப இருந்தா பண்ணியிருக்க மாட்டேன்.

அன்னிக்கு இருந்த கோபத்துல நம்மளை அவங்க மதிக்கலே. மறுபடி எப்படி கூப்பிட்டு டைரக்ட் பண்றது? இன்னைக்கு வரைக்கும் இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாது.

46 ஷாட் டூப்

அந்த பாட்டுல ரம்பா இருக்கிற 46 ஷாட் டூப். ஊஞ்சலில் இருப்பது, நேராக காட்டுவது மட்டும்தான் ரம்பா, மத்தபடி ஓட விட்டது எல்லாம் டூப் தான். டான்ஸ்ர்தான். டூப் வெச்சே அந்த பாட்டு புல்லாவே எடுத்தேன். அவ்வளவு கோவம் இருந்துச்சு.

ஆனா இது ரம்பாவுக்கு தெரியவே தெரியாது. அப்போ ரம்பா டைரக்டர் கிட்ட சொல்லி இருக்குது. அந்த பாட்டுல ஒரு நாள் பெண்டிங் வெச்சிருக்காங்க. அது மட்டும் இன்னும் எடுக்கவே இல்லைன்னு.

அப்புறம் டைரக்டர் கூப்பிட்டு கேட்டாரு, படம் முடிச்சுட்டேன் சார். டூப் வெச்சு எடுத்துட்டேன் அப்படீன்னு சொல்லிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

வண்ண நிலவே வண்ண நிலவே பாட்டுல ரம்பாவா காட்டிய 46 ஷாட் எல்லாமே பொய் என்று இயக்குனர் செல்வபாரதி கூறிய தகவலை கேட்டு வியப்பில் ரசிகர்கள், எப்படி எல்லாம் ஏமாத்தறாங்கய்யா… என்று புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version