நடிகர் பிரஷாந்திற்கு நண்பன் விஜய் செய்யும் உதவி..! நட்புன்னா இது தான்டா..!

90ஸ் காலகட்டம் முதலே தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிரசாந்த். பள்ளி படிப்பை முடித்த உடனே தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்று கதாநாயகனாக மாறினார் பிரசாந்த்.

ஆரம்பத்தில் அவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வருவதற்கு அவரது முதல் திரைப்படமான வைகாசி பொறந்தாச்சு திரைப்படமே காரணமாக இருந்தது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டார் பிரசாந்த்.

பிரசாந்திற்கு வந்த வரவேற்பு:

தொடர்ந்து காதல் கதைகளை கொண்ட திரைப்படங்களை நடிகர் பிரசாந்தை வைத்து இயக்கி வந்தனர். அஜித் விஜய் மாதிரியான நடிகர்களே தொடர்ந்து வெற்றிகளை கொடுக்காத அந்த காலகட்டங்களில் நடிகர் பிரசாந்த் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்து கொண்டிருந்தார்.

அதிலும் அவர் நடித்த ஜீன்ஸ் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் இந்திய அளவில் பேசப்பட்ட படங்களாக இருந்தன. தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வந்த நடிகர் பிரசாந்த் பிறகு சில காலங்களில் வரவேற்பை இழக்க துவங்கினார்.

அதற்குப் பிறகும் கூட வின்னர் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இருந்தாலும் விஜய் அஜித் மாதிரியான பெரும் நடிகர்களுக்கு கிடைக்கும் அளவிற்கான வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

தொடர் தோல்வி:

மேலும் வின்னர் திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்த மம்பட்டியான் மாதிரியான திரைப்படங்களும் பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் நடிகர் பிரசாந்தின் சொந்த வாழ்க்கையும் மிகவும் பிரச்சனைக்குரிய ஒன்றாக இருந்தது.

முதல் திருமணத்தில் எக்கச்சக்க பிரச்சனைகள் ஏற்பட்டு அது விவாகரத்தில் முடிந்தது. இந்த பிரச்சனைக்கு பிறகுதான் சினிமாவில் நாட்டம் இல்லாமல் இருந்து வந்தார் நடிகர் பிரசாந்த். இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில்தான் அந்தகன் என்கிற ஒரு திரைப்படத்தில் வெகு வருடங்களாகவே இவர் நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் ஏற்கனவே வெளியான ஒரு திரைப்படத்தின் ரீமேக்தான் அந்தகன். இந்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில்தான் தற்சமயம் விஜய்யுடன் சேர்ந்து கோட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் பிரசாந்த்.

இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே நடிகர் விஜய்க்கும் இவருக்கும் இடையே நட்பு இருந்து வருகிறது. அந்த வகையில்தான் கோட் திரைப்படத்திலும் நடிகர் பிரசாந்த் வாய்ப்பு வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஒரு வழியாக அந்தகன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலை நாளை வெளியிட இருக்கின்றனர் இந்த பாடலை நடிகர் விஜய் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பாடலில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அனிருத் இருவரும் பாடி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த பாடலுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version