தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் தொழில் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் கொண்டிருப்பார்கள். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் அவர்கள் தனது உழைப்பை, அந்த தொழில் மீதான மரியாதையை எப்போதும் ஒரே மாதிரியாக மனதில் வைத்திருப்பார்கள்.
ஒவ்வொரு முறை கேமரா முன்பு நிற்கும் போதும் ஒரு அறிமுக நடிகனைப் போலவே தன்னை நினைத்துக் கொள்வாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்படி அவர் நினைத்துக் கொள்வதால்தான் இன்றுவரை அவர் உச்சத்திலேயே இருக்கிறார்.
அவரை கீழே வர விடாமல் அந்த உயர்ந்த எண்ணம்தான் எப்போதுமே தாங்கிப் பிடித்திருக்கிறது என்பதே உண்மை.
விஜய்
துவக்கத்தில் இளைய தளபதி விஜய் என அழைக்கப்பட்டவர் இப்போது தளபதி விஜய் ஆக மாறியிருக்கிறார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.
வருங்கால தமிழ்நாட்டின் முதலமைச்சராக கூட வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயித்து விஜய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஏனென்றால் அவரும் தொழில் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் கொண்டவர்.
ஆரம்பத்தில் விஜய் நடித்த போது, அவரும் உருவ கேலிக்கு ஆளானவர்தான். அவரை கிண்டல், கேலி செய்தவர்கள் பலருண்டு. இவரெல்லாம் ஒரு நடிகரா என்று, விஜய் காதுபடவே சிலர் பேசியதாக சொல்லி அவர் தனது நண்பர்களிடம் வருத்தப்பட்ட நாட்களும் உண்டு.
ரூ. 200 கோடி சம்பளம்
ஆனால் இப்போது அவர்தான் தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகராக புகழில், செல்வாக்கில் சிறந்து விளங்குகிறார். இப்போது தமிழ் சினிமா நடிகர்களில் ஒரு படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் விஜய் தான்.
அடுத்ததாக நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் போன்றவர்களும் தங்களது சம்பளத்தை 200 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் எந்த படத்தில் நடித்தாலும், அந்த படத்தில் சிறப்பாக தனது பங்களிப்பை தந்து விடுவார். பல தோல்வி படங்களில் கூட அவரது நடிப்பு வெற்றி பெறும் படத்துக்கு உரிய அளவில் மிகச் சிறப்பாகவே இருக்கும்.
த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்
இப்போது தனது 68வது படத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் விஜய் நடித்து முடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து அவர் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டைரக்டர் எச். வினோத் இயக்குகிறார். வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நடிகர் விஜய் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். ஒரு படத்தில் நடிக்க கமிட்டானால், அந்த படத்தை சொன்ன தேதியில் முடித்துக் கொடுத்து விடுவது விஜயின் வழக்கம்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி ஓய்வே இல்லாமல் தொடர்ந்து விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர்தான், விஜயின் கால்ஷீட்டுகளை, அவர் நடிக்க வேண்டிய புதிய படங்களின் கதைகளை கேட்டுக் கொண்டு இருந்தார்.
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாமே…
அப்போது பிஸியாக நடித்து வந்த விஜயிடம், கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாமே என்று அட்வைஸ் சொல்லியிருக்கிறார். அப்போது விஜய் ‘காசு வாங்கிட்டேனே, என்ன பண்றது?’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
காசு வாங்கிட்டேன்… என்ற பண்றது?
இப்படி சினிமாவில் ஓய்வின்றி நடிப்பதற்கே காசு வாங்கிட்டேன்.. என்ன பண்றது என்று கூறிய விஜய், நாளை முதலமைச்சரானால் மக்களுக்காக ஓயாமல் உழைக்க தயங்க மாட்டார். யாராவது கேட்டால் கூட, மக்கள் எனக்கு ஓட்டுப் போட்டுட்டாங்களே, என்ன பண்றது, என்பது கூட அவரது சிறப்பான பதிலாக இருக்கக் கூடும்.