செம்ம ட்விஸ்ட்டு.. இவரும் இல்ல.. அவரும் இல்ல.. விஜய் மகன் சஞ்சயுடன் இணையும் பிரபல மலையாள நடிகர்..

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இப்போது டாப் ஸ்டார்களில் ஒருவராக இருப்பவர். ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் என்ற இந்த 4 நடிகர்கள் மட்டுமே, நஷ்டம் தராத நடிகர்களாக இருப்பதால், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இவர்களது கால்ஷீட்டுக்காக தவம் இருக்கின்றனர்.

அண்ணாத்த, ஜெயிலர், மாஸ்டர் லியோ, துணிவு, வாரிசு என சரியாக ஓடாத படங்களாக இருந்தாலும் கூட வசூலில் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தில் தான் குறையுமோ தவிர, முதலீட்டில் ஒரு போதும் குறைந்தது இல்லை.

அதனால்தான் இந்த ஹீரோக்களை தேடித் தேடி வந்து படம் எடுக்க நினைக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

ஆனால் ஒரு படத்துக்கு 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய், இப்போது நடித்து வரும் படம், இனி ஒரு படம் என தனது 69வது படத்துடன், தமிழ் சினிமாவுக்கு, நடிப்புக்கு டாடா சொல்ல இருப்பதாக இப்போதே அறிவித்து விட்டார்.

இயக்குநராக விஜய் மகன்

அவரது இடத்தை பிடிக்க அவரது மகன் ஜேசன் சஞ்சய் வருகிறார் என்றால், அவர் நடிகராக அல்ல, இயக்குநராக களம் இறங்குகிறார்.

அவரை நடிகராக்க சுதா கொங்கரா உள்ளிட்ட சில முக்கிய இயக்குநர்கள் கேட்ட நிலையில், நடிப்பு என் நோக்கமல்ல, இயக்குநர் தான் என் லட்சியம் என தெளிவாக கூறியிருக்கிறார் ஜேசன் சஞ்சய்.

ஏற்கனவே வெளிநாட்டில் சினிமா மேக்கிங், திரைப்பட இயக்கம் குறித்த படிப்பை முடித்துள்ள ஜேசன் சஞ்சய், தனது நண்பர்களுடன் சேர்ந்து பல குறும்படங்களை இயக்கி இருக்கிறார். அந்த படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

ஜேசன் சஞ்சய்

இந்நிலையில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட 10 மொழிகளில் பான் இந்தியா படம் எடுக்க ஜேசன் சஞ்சய் தயாராகி விட்டார்.

இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ யார் என்பதுதான் இப்போது டாப் ஆப் கோலிவுட் ஆக இருக்கிறது. அந்த வகையில் முதலில் நடிகர் விஜய் சேதுபதி பெயர் அடிபட்டது. அடுத்து கவின், துருவ் விக்ரம் இவர்களில் யாராவது ஒருவர்தான் ஹீரோ என்ற தகவலும் பரவியது.

துல்கர் சல்மான்

இன்னும் சில நடிகர்களின் பெயர்களை பலரும் கூறிய நிலையில், இப்போதைய நிலவரப்படி ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் நடிக்கிற போகிற நடிகர் மலையாள படவுலகைச் சேர்ந்த துல்கர் சல்மான்தான் என்பது உறுதியாகி விட்டது.

ஏனெனில் இது பல மொழிகளில் வெளியாகும் திரைப்படம் என்பதால் ஏற்கனவே பான் இந்தியா படங்களில் நடித்து இந்தி, தெலுங்கு மொழி ரசிகர்களுக்கும் அறிமுகமானவராக இருப்பவர் துல்கர் சல்மான்தான்.

தக்லைப் படத்தில்

நடிகர் சூர்யாவின் 43வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் துல்கர் சல்மான். அத்துடன் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைப் படத்திலும் துல்கர் சல்மான் நடிப்பது உறுதியாகி உள்ளது.

இப்போது நடிகர் விஜய் மகன் இயக்கும் முதல் படத்திலும் ஹீரோவாக நடிக்க துல்கர் சல்மான் உறுதி செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் துவங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

செம்ம ட்விட்டுதான்

இது செம்ம ட்விஸ்ட்டு தான், இவரும் இல்ல.. அவரும் இல்ல.. விஜய் மகன் சஞ்சயுடன் ஹீரோவாக இணையப் போவது பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான்தான் என்று சினிமா ரசிகர்கள் இப்போதே பரபரப்பாக பேச துவங்கிவிட்டனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version