கைதி படத்தை மிஸ் பண்ணேன்… ஓகே சொல்லிட்டு கார்த்தி எனக்கு போன் பண்ணி கேட்ட வார்த்தை.. விஜய் சேதுபதி பேச்சு..

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகர்களுக்கு சில சமயம் நல்ல பட வாய்ப்பு கிடைத்தாலும், அந்த படத்தை தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக தவறி விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கைது திரைப்படத்தை தவறவிட்ட விஜயசேதுபதி அது பற்றி என்ன கூறினார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: அதற்காக 40 தடவை என்னை அலைய விட்டார்.. நடிகர் ஜனகராஜ் கூறிய வேதனை தகவல்..

நடிகர் விஜய் சேதுபதி..

தமிழக மக்கள் விரும்பும் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜயசேதுபதி மிகச்சிறந்த திரைப்பட நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், பாடல் பாடும் பாடகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் பன்முக திறமையை கொண்டிருக்கிறார்.

இவர் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த தென் மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடி தான், சேதுபதி, 96 போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர்.

நடிகர் கார்த்தி..

இவரைப் போலவே வாரிசு நடிகரான கார்த்தியும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அண்மையில் இவர் மணிரத்தினம் படத்தில் நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவனாக நடித்து பலரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டார்.

பல்லாயிரக்கணக்கான பெண் ரசிகர்களை அதிகளவு பெற்று இருக்க கூடிய கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் தன்னுடைய அற்புத நடிப்பினை காட்டி தனக்கு என்று ஒரு ரசிகர் படையை உருவாக்கிக் கொண்டார்.

கைதி திரைப்படம்..

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளி வந்த கைதி படம் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த படமானது 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளி வந்த அதிரடி திரில்லர் திரைப்படம் எனக் கூறலாம்.

இந்த திரைப்பட வாய்ப்பு முதலில் விஜய சேதுபதிக்கு தான் கிடைத்திருந்தது. எனினும் இந்த படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலையை அடுத்து கார்த்தி இந்த படத்தில் நடித்திருந்தார். மேலும் கார்த்தியோடு இணைந்து இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், ஹரிஷ், உத்தமன், ஜார்ஜ் மேரியன், தீனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

கார்த்தியின் நடிப்பில் வெளி வந்த இந்த படம் மாபெரும் கிட்டடித்து பலரது பாராட்டுதல்களையும் பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான படம் என்று கூறலாம். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் விஜயசேதுபதி தான் மிஸ் செய்த படங்களின் லிஸ்டில் கைதி படத்தை கூறி இருப்பதோடு அது பற்றி தான் கவலைப்படவில்லை தன்னை விட கார்த்தி சிறப்பாக நடித்திருந்தார்.

மேலும் கார்த்தி தன்னிடம் போன் செய்து இது பற்றி பேசியதாகவும் பேட்டியில் கூறி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: குடி போதையில் ஆண் நண்பருடன்.. எதிர்நீச்சல் மதுமிதா செய்த பலே வேலை.. போலீஸார் தீவிர விசாரணை..!

மேலும் ரசிகர்கள் இந்த விஷயத்தை மாறி, மாறி பேசி வருவதோடு இணையத்தில் ட்ரெண்டிங் ஆன பேட்டியாக மாற்றி தெறிக்க விட்டு விட்டார்கள். அத்தோடு விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை குதிரையை ஓட விட்டு இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version