திரைப்படங்களில் நடிப்பதற்கு சிறு வேடங்களாவது கிடைக்குமா? என்று ஏங்கிக் கொண்டிருந்த விஜயசேதுபதி இன்று ஒரு பேன் இந்திய நடிகராக உயர்ந்திருக்கிறார்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளி வந்த தென்மேற்குப் பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த புதுப்பேட்டை, நான் மகான் அல்ல போன்ற படங்களில் அட்மாஸ்பியர் ஆர்கெஸ்ட்ராக நடித்துக் கலக்கி இருப்பார்.
உழைப்பின் மீது நம்பிக்கை வைத்திருந்த இவர் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்ததை சரியான முறையில் பயன்படுத்தி கடுமையான உழைப்பினை போட்டதின் காரணத்தால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.
ஹீரோவாக நடிப்பதோடு நின்று விடாமல் வில்லனாகவும் நடித்து தனது நடிப்பின் மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி விட்டார்.
தற்போது அத்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படமானது ஜனவரி 12-ஆம் தேதி வெளி வர உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் ஒன்று வெளிவந்துள்ளது.
இந்தப் படத்தின் தமிழ் ட்ரெய்லரில் காயத்ரி, ராதிகா ஆப்தே மற்றும் ராதிகா சரத்குமார் போன்றவர்கள் நடித்துள்ள காட்சிகள் இடம் பிடித்து உள்ளது. அதே சமயத்தில் ஹிந்தி ட்ரெய்லரில் விஜய் சேதுபதிக்கு லிப் லாக் முத்தத்தை கத்ரீனா கைஃப் கொடுக்கும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.
இது போன்ற காட்சியை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத காரணத்தால் கடுமையான ஷாக்கிங்கில் இருக்கும் அவர்கள், விஜய சேதுபதியை வைத்து கத்ரீனா கிஸ் அடிப்பதை பங்கமாக கலாய்த்து தள்ளி இருப்பதோடு கமாண்டுகளையும் மீம்களையும் போட்டு தெறிக்க விட்டிருக்கிறார்கள்.
இப்போது இந்த விஷயம் தான் இணையத்தில் மிகப்பெரிய பேசும் பொருளாகி விட்டதோடு ஹிந்தியில் மட்டும் லிப்லாக் காட்சிக்கு இருக்கிறது. ஆனால் தமிழில் இல்லையே என்ற வருத்தத்தில் பல ரசிகர்கள் உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.