தமிழ் திரையுலகை பொருத்தவரை முன்னணி நாயகர்கள் பல இருந்தாலும் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் மக்கள் செல்வம் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய விஜய் சேதுபதி.
இவர் தமிழ் திரை உலகத்திற்கு தென் மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் ஹீரோவாக நடித்ததலின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இவரது எதார்த்த நடிப்பை பார்த்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து சேர்ந்தது.
அந்த வரிசையில் இவர் பீசா என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் இளநங்கையர் நெஞ்சிலும் குடி புகுந்தார்.
மேலும் இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், நானும் ரவுடிதான், சேதுபதி, சூது கவ்வும், தர்மதுரை ,விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
அண்மையில் உலகநாயகன் கமலஹாசனோடு இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் இந்த படம் மாபெரும் வெற்றியும் வரலாறு காணாத வசூலையும் தந்து அதனைப் படைத்தது அனைவருக்கும் நன்றாக தெரியும்.
இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த டிஎஸ்பி என்ற திரைப்படம் பெயர் சொல்லும் அளவுக்கு நல்ல பெயரையோ, வசூலையோ இவருக்கு தரவில்லை.இதனால் படம் படுதோல்வி அடைந்தது என்று கூட கூறலாம்.
இதனை அடுத்து இவர் தற்போது மைக்கேல் எனும் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதி தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களிடம் அந்த இரண்டு பொண்ணுகளையும் கூப்பிட்டு கதை சொல்ல வேண்டும் என்பதை கூறுவதோடு மட்டுமல்லாமல் வற்புறுத்தி வருகிறார்.
அட யார் அந்த இரண்டு பெண்கள் என்ற கேள்விக்கு அந்த இரண்டு பெண்களும் தான் தற்போது இவருக்கு நடிப்பை கற்றுத் தரும் கலைஞர்களாம்.
எனவேதான் அவர்கள் இருவரும் கதைக்கு ஓகே சொல்லக்கூடிய பட்சத்தில் இவர் அதில் நடிப்பதற்கு ஓகே சொல்வார் என்ற செய்தி தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.