நடிகர் விஜய் சேதுபதியின் அப்பா யாரு தெரியுமா..? தெரிஞ்சா நிச்சயம் கண்ணீர் வந்திடும்..!

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. ரசிகர்கள் விரும்பும் நடிகராக பல படங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர்.

விஜய் சேதுபதி

பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், ரம்மி, தர்மதுரை, பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த விஜய் சேதுபதி, ஹீரோவாக மட்டுமின்றி சில படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தினார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கும், பேட்ட படத்தில் ரஜினிக்கும், விக்ரம் படத்துக்கும் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, இந்தியில் பாலிவுட் நாயகன் ஷாருக்கானுக்கும், வில்லனாக நடித்து அசத்தினார்.

விவசாய குடும்பம்

ராஜபாளையத்தில் கடந்த 1978ம் ஆண்டில் பிறந்தவர் விஜய் சேதுபதி. நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அரசு பள்ளியில் படித்த விஜய் சேதுபதிக்கு படிப்பை காட்டிலும் விளையாட்டில் தான் அதிக ஆர்வம். ஆனால் விளையாட்டிலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

பிபிஏ படித்த அவர், துபாயில் 3 ஆண்டுகள் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிந்தார். 2003 வரை துபாயில் இருந்த அவர், அதன்பிறகு சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: முக்கிய புள்ளி வீசிய வலையில் சிக்கிய Fish நடிகை.. வீதிக்கு வந்த ரகசியம்..

அக்கவுண்டன்ட்

ஆனால் நடிக்க வந்த புதிதில் விஜய் சேதுபதிக்கு சினிமாவில் ஒரு ஓரத்தில் கூட இடம் பிடிப்பது பெரும்பாடாக இருந்தது. அப்படிதான் புதுப்பேட்டை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில் வந்து சென்றார்.

அதன்பிறகு கூத்துப்பட்டரையில் சேர்ந்த அவர், அங்கும் அக்கவுண்டன்டாக 3 ஆண்டுகள் பணி செய்தார். நடிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் குறும்படங்களில் நடிக்க துவங்கினார்.

நிறைய குறும்படங்களில் நடித்தார். அந்த குறும்படங்கள் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இடம்பெற்றதால், அங்கு சிறப்பு விருந்தினராக வந்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், விஜய் சேதுபதிக்கு தனது படங்களில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார்.

அப்பா காளிமுத்து

தனது 35 வயதுக்கு பிறகுதான் விஜய் சேதுபதி நடிகராக தமிழ் சினிமாவில் புகழ் பெற ஆரம்பித்தார். அதுவரை அவரது செயல்பாடுகள் குறித்தும், துபாயில் இருந்து திரும்பி வந்தது குறித்தும் அவரது அப்பா காளிமுத்து ஒரு வார்த்தை கூட திட்டவில்லை. ஒரு சொல் கூட கடிந்து பேசவில்லை. ஒருவித முகச்சுளிப்பை கூட தனது மகனிடம் காட்டவில்லை.

இதையும் படியுங்கள்: பாக்குறதுக்கு மட்டும் தான் காமெடி பீஸ்.. ஆனால்.. நிஜத்தில் ரெடின் கிங்ஸ்லி..!

கஞ்சியை கூட

இதுகுறித்து விஜய் சேதுபதி நேர்காணல் ஒன்றில் கூறுகையில், நான் நடிகனாக பிறகுதான் என் தந்தை காளிமுத்து நல்ல உணவு சாப்பிட்டார். நல்ல சட்டையே அணிந்தார். விவசாயியான அவர் என்னை வளர்க்க நிறைய கஷ்டப்பட்டார். ஒரு காலத்தில் கஞ்சியை கூட பக்கத்து வீட்டில் கடன் வாங்கி குடிக்கும் நிலைமையில் வாழ்ந்திருக்கிறோம்.

படாத கஷ்டங்களே இல்லை

இப்படி ஒருேளை சோத்துக்கே கஷ்டப்பட்டிருக்கிறோம். நிறைய நேரம் சைக்கிள் பஞ்சர் ஒட்டியே குடும்பத்தை எங்கப்பா காப்பாற்றினார். எங்கப்பா வாழ்க்கையில் படாத கஷ்டங்களே இல்லை என்று கூறலாம், என்று கண்ணீர் விட்டபடி கூறியிருக்கிறார்.

இப்படி விஜய் சேதுபதியின் அப்பா காளிமுத்து படாத பாடுகளை பட்டு தன் மகன் விஜய் சேதுபதியை காப்பாற்றி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version