போடுடா வெடிய …சர்வதேச திரைப்பட விழாவில் 40 விருதுகள் அள்ளிய விஜய சேதுபதியின் படம்…!!

 மக்கள் செல்வன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கக்கூடிய விஜய சேதுபதியின் படம் மிகவும் எதார்த்தமாக இருக்கும். அந்த வரிசையில் இவர் நடித்த மாமனிதன் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை இவருக்கு பெற்று தந்தது அனைவருக்கும் தெரியும்.

இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்க விஜயசேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்க இந்த படத்தில் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

 மேலும் இந்த படத்திற்கான இசையை இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக கூட்டணி அமைத்து இசை அமைத்திருந்தார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜா தனது ஒய் எஸ் ஆர் நிறுவனம் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

 மேலும் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை தந்த இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வாரி குவித்திருக்கிறது. இதனை அடுத்து இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த மாமனிதன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் சுமார் 40 விருதுகளை அள்ளி அடித்திருக்கிறது.

 மேலும் ஐ எம் டி பி நடத்தும் மூன்று விழாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்திருப்பதை பார்த்த அனைவரும் ஆச்சிரியத்தோடு அவர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறி வருகிறார்கள்.

சமீப காலமாக நடிகருக்கு  உரிய எந்த வித பந்தாவும் இல்லாமல் அது எந்த விதமான கேரக்டர் ரோலாக இருந்தாலும் அதை எடுத்து கலை கட்டும் விதமாக நடித்து வரும் விஜய சேதுபதிக்கு இது போன்ற விருதுகள் மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தித் தரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

 இதனை இந்த விஷயத்தை அறிந்தவுடன் இவரது ரசிகர்கள் அனைவரும் மக்கள் செல்வனை வாழ்த்தி தலை மேல் வைத்து கொண்டாடுகிறார்கள் என்று கூறலாம். எனவே மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …