அட விஜய் சேதுபதி பட வாய்ப்புக்காக இதை செஞ்சிருக்காரா..? லீக்கான புகைப்படம்.. இங்க பாருங்க..!

ஒரு நடிகன் என்பவன் சாதாரணமாக உருவாகி விடுவதில்லை. வெளிச்சத்துக்கு வரும் வரை அவர்கள் இருட்டிலிருந்து அந்த வெளிச்சத்தை அடைய, இந்த வெளிச்சமான இடத்துக்கு வர என்னென்ன போராட்டங்களை சந்தித்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அவர்களுடன் அந்த நேரத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் உதாரணமாக சில நடிகர்கள், சினிமாவில் வருவதற்கு முன் மளிகை கடையில் வேலை பார்த்து இருக்கிறார்கள். ஹோட்டலில் சர்வராக இருந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு கீழ் பணி புரியும் ஊழியர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதன் பிறகு சினிமா மீது கொண்ட கட்டுப்படுத்த முடியாத ஆர்வம் காரணமாக வாழ்க்கையில் எப்படியாவது ஜெயித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

சினிமாவில் நடிக்க, வாய்ப்பு கிடைக்க பல விதங்களில் தங்களை உடல் ரீதியாக, மனரீதியாக வருத்தினாலும் அதையும் கடந்து அந்த சினிமா என்கிற அந்த வெற்றிக்காக அவர்கள் கடுமையாக உழைத்து, சினிமாவில் நுழைந்து விடுகின்றனர்.

சினிமாவில் நடித்து சாதிப்பதை விடவும் சினிமாவுக்குள் வருவதற்கு அவர்களின் போராட்டம்தான் அந்த சாதனைதான் மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது.

ஏனெனில் சினிமா பின்புலம் இல்லாத சினிமா சார்ந்த யாருடைய ஆதரவும் இல்லாமல், குறிப்பாக சினிமா வாரிசாக இல்லாமல், தனி மனிதனாக சினிமாவுக்குள் வருவது என்பது அவ்வளவு லேசுபட்ட காரியம் அல்ல.

விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய நடிகராக இருக்கிறார். முன்னணி நாயகர்களில் ஒருவராக கவனிக்கப்படுகிறார். ஒரு படத்தில் நடிக்க 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

ஆனால் நடிகர் விஜய் சேதுபதி எந்த பின்புலமும் இல்லாமல், யாருடைய துணையும், ஆதரவும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய ஆரம்பகால சினிமா பயணம் என்பது பலவித போராட்டங்களை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் சினிமா அறிமுக நடிகராக, சினிமாவில் நடிக்க முயற்சித்த காலகட்டத்தில் அவர் பயன்படுத்திய விசிட்டிங் கார்டு புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகர்

இப்போது முன்னணி நடிகராக அவர் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விஜய் சேதுபதியே இல்லாத படம் இல்லை என்று கூறும் அளவுக்கு பல படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களை வில்லனாகவும், சில படங்களில் கேமியோ ரோலிலும், சில படங்களில் ஸ்பெஷல் கெஸ்ட் ஆகவும் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழி படங்களிலும் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார்.

துவக்கத்தில் துபாயில் வேலை பார்த்த விஜய் சேதுபதி பிறகு, சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு வந்து சில படங்களில் துணை வேடத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக புதுப்பேட்டை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்திருப்பார்.

தென்மேற்கு பருவக்காற்று

அதன் பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் தான் அவருக்கு சினிமாவில் நல்ல அடையாளத்தை கொடுத்தது.

தொடர்ந்து சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மனியும், காதலும் கடந்து போகும், இறைவி, விக்ரம் வேதா, சேதுபதி உள்ளிட்ட பல படங்கள் தான் அவரை முன்னணி கதாநாயகனாக உருவாக்கியது.

அதிலும் ஒரே ஆண்டில் எட்டு படங்கள் வரை நடிக்கும் அளவுக்கு விஜய் சேதுபதி மிகப் பிரபலமாக இருந்தால் ரஜினி, கமல், விஜய் என முன்னணி நாயகர்களுடன் வில்லனாகவும் நடித்தார். ஜவான் என்ற இந்தி படத்தில் ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசிட்டிங் கார்டு

இந்த நிலையில் இப்போது பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, துவக்க காலத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு, அவர் அச்சடித்து கொடுத்த விசிட்டிங் கார்டு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒல்லியான தோற்றத்தில்

அந்த கார்டில் மிகவும் ஒல்லியான தேகத்தோடு, விஜய் சேதுபதி சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். அந்த கார்டில் அவருடைய செல் போன் நம்பர் மற்றும் அட்ரஸ் இருக்கிறது. பிலிம் ஆர்ட்டிஸ்ட் மட்டும் டிவி ஆர்டிஸ்ட் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த விசிட்டிங் காடு இப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது

அட விஜய் சேதுபதி பட வாய்ப்புக்காக இப்படி விசிட்டிங் கார்டு எல்லாம் அச்சடிச்சிருக்காரா என்று லீக்கான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam