விஜய் சேதுபதியின் அடுத்த படம் என்ன தெரியுமா? போஸ்டர் உடன் வெளியான அறிவிப்பு…!!

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்திய அழகி அனுக்ரீத்திவாஸ் நடிப்பதாக  கூறப்பட்டது.

 மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பானது திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கியது.இந்த படத்தில் திண்டுக்கல் டிஎஸ்பியாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

எனவே இந்தப் படத்திற்கு டிஎஸ்பி என்ற பெயரை வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வாஸ்கோடகாமா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.

மேலும் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட காரணத்தால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான இசையை டி. இமாம் இசைத்திருக்கிறார்.

மேலும் விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய தினேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும் சண்டை பயிற்சியை தினேஷ் சுப்புராயன், கலை இயக்குனராக குமார் பணியாற்றி வருகிறார். பாடல்கள் அனைத்தும் யுகபாரதியின் மூலம் எழுதப்பட்டுள்ளது.

 ஏற்கனவே இந்த போஸ்டர் வெளியிட்டிருந்தபோது சிவப்பு நிற பின்னணியை கொண்டிருந்தது. தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போஸ்டர் மிகவும் அழகாக உள்ளதாக ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

 அந்த பழைய போஸ்டரில் திண்டுக்கல் நகரத்தின் பின்னணி இருந்தது.இதில்  ராயல் என்ஃபீல்டு பைக்கில் விஜய் சேதுபதி போலீஸ் கெட் அப் வருவது போல் அமைந்தது

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த  இந்தப் படம் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆகப்போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளிவந்து புதிய போஸ்டரும் வெளிவந்துள்ளது.

 இந்த போஸ்டர் முதல் போஸ்டருக்கு நேர் மாறாக மஞ்சள் நிற பேக்ரவுண்டை பின்னணியாக கொண்டுள்ளது. எனவே வெகு விரைவில் டிஎஸ்பி துரைக்கு வர இருக்கக்கூடிய சூழ்நிலையில் இவரது ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்காக மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …