வரும் ஜனவரி 12ஆம் தேதி தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் விஜய சேதுபதி நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, காயத்ரி மற்றும் ராதிகா சரத்குமார் நடிப்பில் மெரி கிறிஸ்துமஸ் என்ற திரைப்படம் வெளிவர உள்ளது.
இதனை அடுத்து இந்த படத்தின் பிரமோஷன் சமீபத்தில் நடைபெற்ற சமயத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி சற்று கடுப்பாகி பதில் அளித்திருக்கும் நேர்த்தி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு மார்க்கெட்டை பிடித்திருக்கும் விஜய சேதுபதி சென்ற ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளி வந்த ஜவான் படத்தில் வில்லனாக நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.
இதனை அடுத்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படமானது இரு மொழிகளில் வெளி வரக்கூடிய சூழ்நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் பட ப்ரமோஷன் சமயத்தில் தமிழர்களின் எண்ணமே ஹிந்தி வேண்டாம்.. தெரியாது.. போடா.. என்கின்ற வகையில் தான் உள்ளது என்ற கேள்வியை கேட்ட உடனே விஜயசேதுபதி காண்டாகி விட்டார்.
மேலும் ஹிந்தியில் வெளி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு லிப்லாக் காட்சியில் முத்தம் கொடுப்பது போல ஒரு சீன் உள்ளது. அதே சீன் தமிழில் இல்லை என்ற கேள்விக்கு இந்த ஒரு சீன் மட்டும் தான் உங்களுக்கு தெரிகிறதா? படத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது அதையும் பாருங்கள் என்று சிரித்த வண்ணம் விடையளித்தார்.
மேலும் கத்ரீனா கைஃப் மற்றும் ராதிகா ஆப்தே பற்றி எழுப்பப்பட்ட கேள்வியில் ராதிகா ஆப்தே மிகவும் கூலான பர்சன் என்றும் அதே நேரத்தில் கத்ரீனா கைஃப் சற்று சென்சிடிவ் ஆனவர் என்றார்.
அத்தோடு தமிழ் நடிகர்கள் பாலிவுட்டுக்கு சென்றால் மரியாதை கிடைக்காது என்பதெல்லாம் பொய். இது வரை ஐந்து படங்களில் நடித்திருக்கும் எனக்கு மிகச் சிறப்பான மரியாதை தான் கிடைக்கிறது. எனவே திரைப்படத்திற்கு மொழி முக்கியமல்ல நடிப்பு தான் முக்கியம் என்பதை சூசகமாக தெரிவித்தார்.
மேலும் ஒரு பத்திரிக்கையாளர் ஹிந்தி தெரியாது போடானு தமிழ்நாட்டில் சொல்லும் போது எப்படி நீங்கள் ஹிந்தி படங்களில் நடிக்கிறீர்கள் என்று கேட்டதுமே, இந்த கேள்வியே தப்பு தமிழ்நாட்டில் யாரும் ஹிந்தி கற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்லவில்லை.
ஹிந்தியை திணிக்க கூடாது என்று தான் கூறுகிறார்கள். எனவே கேள்வியை திருத்தி விடுங்கள் என சொன்னதோடு இதே கேள்வியை அமீர்கான் இடம் கேட்பீர்களா? என்று கோபமாக கேட்டார். அதனை அடுத்து பத்திரிக்கையாளரை திட்டி தீர்த்த விஜய் சேதுபதி மகன் குறித்து கேட்ட கேள்விக்கு அதை அவரே சொல்வார் என்று கூறினார்.