என் வாழ்க்கையில் பேய் தான் வந்து விளக்கு ஏத்துச்சு.. விஜய் சேதுபதி உருக்கம்..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்து தன் படிப்பை விருதுநகரிலும், சென்னையிலும் மேற்கொண்ட நடிகர் விஜய சேதுபதி தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த திரைப்பட நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் விளங்குபவர்.

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து இளங்கலை வணிகவியலில் பட்டம் பெற்றதை அடுத்து மூன்றாண்டு காலம் துபாயில் கணக்காளராக பணி புரிந்திருக்கிறார். இதனை அடுத்து 2003-இல் இந்தியாவிற்கு திரும்பி வந்த இவர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டார்.

நடிகர் விஜய் சேதுபதி..

இதனை அடுத்து கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்து அங்கு நடிகர்களை அருகில் இருந்து கவனித்து வந்த இவருக்கு பெண் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்த இவர் பீட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும் பட தமிழ் திரைப்பட விழாவில் பெற்றிருக்கக் கூடிய இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்திற்காக ஆடிஷனில் கலந்து கொண்டு தனுசுக்கு நண்பராக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இதனை அடுத்து தமிழ் மட்டுமல்லாமல் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் பிரபு சாலமனின் லீ திரைப்படத்திலும் சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல என்ற திரைப்படங்களில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இவரது கனவானது தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் அடுத்ததாக பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடி தான் ,சேதுபதி, 96 போன்ற படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

என் வாழ்க்கையில் பேய் தான் விளக்கு ஏத்துச்சு..

திரை உலகில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் வந்து இன்று மக்கள் நாயகனாக உயர்ந்து இருக்கக் கூடிய இவர் தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகளை அள்ளி சென்று இருக்கிறார்.

இதனை அடுத்து மாதவனுடன் இணைந்து 2017-இல் விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் செக்கச் சிவந்த வானம், சீதக்காரி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து சமீபத்தில் தனது வாழ்க்கையில் பேய் தான் விளக்கு ஏத்துச்சு என்று உருக்கமாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக பங்கேற்று இருந்த போது பேசியிருக்கும் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குக் காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் தன்னுடைய படத்தின் பிரமோஷனுக்காகவும் கலந்து கொண்டார் நடிகர் விஜய் சேதுபதி.தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள மகாராஜா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வசூலை பெற்றிருக்கிறது

விஜய் சேதுபதியின் உருக்கமான பேச்சு..

இந்த படத்தையும் வெற்றியை கொண்டாடும் விதமாக சமூகத்தில் குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விஜய் சேதுபதி.

இந்த நிகழ்ச்சியை பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி இறுதியாக உருக்கமான ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தார்.

எல்லோரும் கடவுள் தான் எங்களுடைய வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தார் என்று கூறுவார்கள். ஆனால் என்னை கேட்டால் ஒரு பேய் தான் என்னுடைய வாழ்க்கையில் வந்து விளக்கேற்றியது.

அது பீட்சா படத்தில் நடித்த பேய் தான் எனக்கு அறிமுகத்தை பெற்று கொடுத்தது. அந்த படத்திற்கு பிறகு தான் நாலு பேர் என் முகத்தை பார்த்து டேய்.. விஜய் சேதுபதி டா என்று அடையாளம் கண்டார்கள்.

அதற்கு முன்பு எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு பேர் வாங்கி கொடுத்தது பேய் படமான பீட்சா திரைப்படம் தான் என உருக்கமாக பேசி இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam