யப்பா சாமி முடியல.. ஓவர் அலப்பறை செய்யும் விஜய்சேதுபதி மகன்.. இப்போ என்ன பண்ணி இருக்கார் பாருங்க..!

திரையுலகை பொருத்த வரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிக அளவு ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளது. அந்த வகையில் மக்கள் நாயகனாக தனது எதார்த்த நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி பற்றிய பதிவினை விரிவாக இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

இன்று உள்ள காலகட்டத்தில் சாமானிய மனிதர்களே அலப்பறைகளை அதிகளவு பண்ணக் கூடிய வேளையில் மக்கள் மத்தியில் செலிபிரிட்டியாக திகழக்கூடிய நடிகரின் மகன் அலப்பறைகள் செய்வதில் ஆச்சிரியம் ஏதுமில்லை.

எப்பா சாமி முடியல..

இவர் செய்து வரும் அலப்பறைகளைப் பார்த்த ரசிகர் கூட்டம் அப்பா..சாமி.. தாங்க முடியலடா.. என்று சொல்லக்ஸகூடிய வகையில் உள்ளது என சொல்லலாம்.

தற்போது இவர் பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் டைட்டில் இவர் பெயர் வெறும் சூர்யா என்றே போடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தன் தந்தையின் பெயரில் இருந்து அவர் தன்னை வெளிப்படுத்த  விரும்பவில்லை என்று ஓவராக அலப்பறை செய்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய ஒரிஜினாலிட்டி மூலம் தான் மக்கள் மத்தியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதில் முழுமூச்சாக இருக்கும் சூர்யா சேதுபதி தன் முதல் படத்தில் திறமையாக நடித்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

ஓவர் அலப்பறை செய்யும் விஜய சேதுபதி மகன்..

ஏற்கனவே பல பேட்டிகள் மற்றும் வீடியோக்களில் நேர்த்தியான முறையில் பேசி தந்தையைப் போல அவரது வழியை பின்பற்றாமல் தன்னுடைய வழியில் மூலம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை இவர் பேட்டியின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இவரின் படத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் திரைத்துறையில் இவரது அப்பாவை போல மணிமகுடம் சூடுவாரா? இல்லை வேறு சில வாரிசு நடிகர்களைப் போல மண்ணைத் கவ்வுவாரா? என்பது அந்த படம் வெளி வந்த பிறகு தெரியும் என்று சொல்லி வருகிறார்கள்.

இப்ப என்ன செஞ்சாரு..

இவர் பீனிக்ஸ் படத்தில் வாய்ப்பு கிடைத்ததை பற்றி பேசும் போது அப்பாவுக்கு ஷூட்டிங் க்கு உணவு கொண்டு சென்று கொண்டிருந்த போது அங்கு இருந்த ஸ்டாண்ட் மாஸ்டர் தன்னை பார்த்து பீனிக்ஸ் படத்தில் நடிக்க தேர்வு செய்ததையும் பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் முதல் படத்தில் சூர்யா என்ற பெயரில் தான் அறிமுகப்படுத்தி இருக்கிறார்களே ஒழிய சூர்யா விஜய் சேதுபதி என்று அறிமுகப்படுத்தவில்லை என பந்தாவாக பேசியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சூர்யா சேதுபதி தற்போது ஹேர் கலரிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதனை அடுத்து விஜய் சேதுபதி போல அவரது மகன் சூர்யாவுக்கு அடக்கமும் பணிவும் இல்லை என்று பலரும் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்து வருவதோடு சினிமாவில் நேப்போட்டீசம் தான் சில சமயங்களில் வெற்றியை பெற்று தரும் என ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version